மதுரையில் கம்யூ. முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு தீவிர சிகிச்சை

மதுரையில் கம்யூ. முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு தீவிர சிகிச்சை
X

மதுரை முன்னாள் எம்.எல்.ஏ. நன்மாறன்.

மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதால், செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்

உடல் நலக்குறைவு காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. வுக்கு தீவிர சிகிச்சை: அளிக்கப்பட்டு வருகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மதுரை மாவட்ட குழு உறுப்பினருமான நன்மாறன், அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். மருத்துவர்கள் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். தீடீர் மூச்சுத் தினறல் காரணமாக, நேற்று இரவு நன்மாறன் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் .இந்த நிலையில், தொடர்ந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டு உள்ளதால், செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இவருக்கு 74. வயதாகிறது.

Tags

Next Story
ai healthcare products