மதுரை அருகே பள்ளியில் புதிய விளையாட்டு பொருட்கள் பயன்பாடு பகுதி திறப்பு

மதுரை அருகே பள்ளியில் புதிய விளையாட்டு பொருட்கள் பயன்பாடு பகுதி திறப்பு
X

மதுரை அருகே உள்ள பள்ளியில் குழந்தைகள் விளையாடுவதற்கான பகுதி திறந்து வைக்கப்பட்டது.

மதுரை அருகே பள்ளியில் புதிய விளையாட்டு பொருட்கள் பயன்பாடு பகுதி திறந்து வைக்கப்பட்டது.

மதுரை நாகமலை புதுக்கோட்டை அச்சம்பத்தில் உள்ள மகிழ்ச்சி இளம் மழலையர் பள்ளியில் , பள்ளி குழந்தைகளை மகிழ்விப்பதற்காக அவர்களுக்காக பள்ளி நிர்வாகத்தின் சார்பாக பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் புதிய அவுட்டோர் பிளேயிங் ஏரியா ஏற்பாடு செய்யப்பட்டு விளையாட்டுச் சாதனங்கள் புதிதாக பொருத்தப்பட்டு குழந்தையின் பயன்பாட்டிற்கு இன்று முதல் செயல்பாட்டிற்கு வந்தது.

இதில் ஸ்லைடிங், ஊஞ்சல், மேரிகோ ராட்டினம், ரவுண்ட் ராட்டினம் மற்றும் பல விளையாட்டு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த புதிய பிளேயிங் ஏரியாவின் பூஜைகளை ஹரிஷ் குமார் மற்றும் பூமிநாதன் நடத்தினார்கள்.

இந்தக் குழந்தைகள் பிளேயிங் ஏரியாவின் திறப்பு விழாவிற்கு செல்வி பிரீத்தி ஜெனிபர் வரவேற்புரை ஆற்றினார், பள்ளியின் நிறுவனர் சார்லஸ் ராஜ்குமார் தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் நித்யா தேவி மற்றும் கெவின் குமார் முன்னிலை வகித்தனர்.

தொழிலதிபர் ஜே கதிர்வேல் புதிய பிளேயிங் ஏரியாவினை ரிப்பன் கட் செய்து தொடக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபர் தங்க மாரியப்பன் கலந்து கொண்டார். வந்தோர் அனைவருக்கும் நன்றி கூறி நன்றி உரையாற்றினர் அக்ஷிதா.

விழாவில் பங்கேற்ற பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டினை வினோத் முத்து ஜெயலட்சுமி சுபா அமலா ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!