சோழவந்தான் அருகே மாணவர்களுக்கு வாழ்வியல் வழிகாட்டு மையம் துவக்கம்

சோழவந்தான் அருகே மாணவர்களுக்கு வாழ்வியல் வழிகாட்டு மையம் துவக்கம்
X

சோழவந்தான் அருகே மாணவர்களுக்கு வாழ்வியல் வழிகாட்டு மையம் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மாணவர்களுக்கு வாழ்வியல் வழிகாட்டு மையம் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

சோழவந்தான் அருகே ராயபுரத்தில் கல்விப் பள்ளியில் சமூக பாதுகாப்பு துறை மற்றும் கல்வி அறக்கட்டளை இணைந்து செயல்படுத்தும் வாழ்வியல் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை மாவட்டத்தில், குழந்தைகள் இல்லத்தில் தங்கி இருக்கும் குழந்தைகளுக்கு வாழ்வியல் வழிகாட்டுதல் மற்றும் இல்லத்திலிருந்து தங்களது பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களிடம் சென்ற பிறகு ஐந்துவருடத்திற்கு அவர்களை பின் தொடர் பணி மேற்கொள்வது குழந்தைகள் உயர்கல்வி பயில்வதை கண்காணிக்க உள்ளது.

உயர்கல்வி முடித்த பின்பு தக்க வேலை வாய்ப்பினை பெற்று பயனடையவும், அதன் தொடர்பான அனைத்துநடவடிக்கைகளையும் மேற்கொள்வது போன்றவைகள் இம்மையத்தின் முக்கிய நோக்கமாகும்.

இம் மையத்தின் துவக்க விழாவானது,அன்னைசத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லத்தில் தேசிய குழந்தைகள் தினதனன்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சுந்தர் குழந்தை பாதுகாப்பு குறித்தும், விழா சிறப்புரை ஆற்றினார்.

கல்வி குழுமத் தலைவர் டாக்டர் செந்தில்குமார் பேசுகையில், குழந்தைகளின் எதிர்காலம் நடவடிக்கைகள் மற்றும் இத்திட்டதின் பயன் குறித்து விரிவான தகவல்களைத் பகிர்ந்து வாழ்த்துரை வழங்கினார்.பிரேமலதா வரவேற்புரை வழங்கினார். அன்னை சத்தியா நினைவு அரசு குழந்தைகள் கண்காணிப்பாளர்விஜயலட்சுமி, ஜே.எஸ்.எஸ்.சுப்பிரமணியன், இயக்குனர் வாழ்த்துரை வழங்கினர். கல்வி குழுமம் மனிதவள மேம்பாட்டு அலுவலர் அனிதா நன்றி உரையாற்றினார்.

இந்நிகழ்வில், மதுரை மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் இல்லத்தில் தங்கி இருக்கும் குழந்தைகள்மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story
ai healthcare products