மதுரை வில்லாபுரத்தில் மழைக்கு வீட்டின் கூரைகள் இடிந்து விழுந்து சேதம்.
மதுரை வில்லாபுரத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து கிடந்த காட்சி.
மதுரை வில்லாபுரம் அன்பு நகர் பகுதியில், பழமையான ஓட்டு வீட்டின் மேல் கூரை சரிந்து விழுந்து சேதம் அடைந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் விபத்தின் போது உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது:
மதுரை அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். லட்சுமிபுரம் பகுதியில் பாத்திரம் வியாபாரம் செய்து வருகிறார் . ராஜேந்திரன் வில்லாபுரம் அன்பு நகர் பகுதியில் 30 வருட பழமையான ஓட்டு வீடு வாங்கி பராமரிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.
அருகிலுள்ள பொதுமக்கள் வீடு இடியும் நிலையில் இருப்பதாக மாநகராட்சிக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் பராமரிக்க நோட்டீஸ் வழங்கியதாக கூறப்படுகிறது.
பழமையான ஓட்டு வீடு பராமரிக்காததால், நேற்று பெய்த கனமழையால் சேதமடைந்த மரக்கட்டைகள் இன்று காலை 8 மணி அளவில் மேல் கூரை ஓடுகள்திடீரென சரிந்து விழுந்ததில், முற்றிலும் சேதம் அடைந்தது.
இந்த பழமையான வீட்டில் யாரும் இல்லாததாலும், அருகிலுள்ள வீட்டில் இருப்பவர்கள் அந்த சமயத்தில் வெளியே வராததால் ஓடு சரிந்து விழுந்தபோது உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
இது குறித்து,கீரைத்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாநகராட்சி பழமையான வீடுகளை ஏற்கனவே , இடித்து புதிய வீடு கட்ட அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அன்பு நகர் பகுதியில் திடீரென வீட்டின் மேற்கூரை சரிந்து விழுந்ததால் வில்லாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu