மதுரை மாவட்ட ஆட்சியரிடம் இந்து அமைப்பினர் புகார்

மதுரை மாவட்ட ஆட்சியரிடம் இந்து அமைப்பினர் புகார்
X

மதுரை ஆட்சியரிடம் புகார் அளித்த இந்து அமைப்புகள். 

மதமாற்றம் செய்ய முயற்சி நடப்பதாக, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது.

மதுரை கீழவெளி வீதியில், சௌவுராஷ்டிரா மக்களை வேற்று மதத்திற்கு மாற்ற முயற்சி நடப்பதாக கூறி, மதுரை இந்து அமைப்பின் நிர்வாகி கே.கே. ரமேஷ் தலைமையில், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில், கீழவெளி வீதியில் ஒரு குழுவினர் சௌராஷ்ட்ரா கிறிஸ்தவ அமைப்பு என்பதை உருவாக்கி, அதன்மூலம் அப்பகுதியில் சௌராஷ்ட்ரா மக்களை மதம் மாற்றம் செய்ய முயற்சி செய்வதாகவும், சௌராஷ்டிரா மொழியில் பைபிள் வெளியிட உள்ளதாகவும் கூறியுள்ளனர். இது தொடர்பாக, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். மேலும், இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட உள்ளதாகவும், அவர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி