பலத்த மழை:தடுப்பணைகளில் நுரை பொங்கும் தண்ணீரால் மக்கள் அச்சம்

பலத்த மழை:தடுப்பணைகளில் நுரை பொங்கும் தண்ணீரால் மக்கள் அச்சம்
X

வைகை ஆற்றில் செல்லும் தடுப்பணைகளில் நுரை பொங்கி காட்சியளிக்கிறது

வைகை ஆற்றில் செல்லும் தடுப்பணைகளில் நுரை பொங்கி காட்சியளிப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்

இரவு முழுவதிலும் பெய்த கன மழையால், வைகை ஆற்றில் செல்லும் தடுப்பணைகளில் நுரை பொங்கி காட்சியளிப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மதுரை மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதிலும் நேற்று இரவு முழுவதிலும் பெய்த கன மழை காரணமாக, வைகை ஆற்றில் மழை நீர் வர தொடங்கியது. இதையடுத்து, வைகை ஆற்றோர பகுதிகளான செல்லூர், மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளிலும் நுரை பொங்கி நிற்பதால், பொதுமக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுப்பு பல கோடி ரூபாய்க்கு திட்டங்கள் செயல்படுத்தபட்டவரும் நிலையில் மீண்டும் சாக்கடை நீர் வைகையாற்றில் கலப்பதால், நுரை பொங்குகிறதா? இல்லையெனில் ரசாயனம் ஏதும் கலந்து நுரை பொங்குகிறதா என பொதுமக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.மழை பெய்துவரும் நிலையில் வைகை ஆற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது..

Tags

Next Story
ai in future agriculture