மதுரை நகரில் பலத்த மழை: மக்கள் மகிழ்ச்சி

மதுரை மாநகரில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்
Madurai Rain Today - மதுரை நகரில் சில இடங்களில் பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
மதுரை நகரில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. ஆனால், அதே சமயத்தில், மதுரை புறநகர் பகுதியான சோழவந்தான், வாடிப்பட்டி ,ஒத்தக்கடை, கருப்பாயூரணி ,ஆகிய பகுதிகளில் மாலை நேரங்களில் மழை பெய்தது.மதுரை நகரை பொருத்தமட்டில், இன்று பிற்பகல் கடும் வெப்பம் நிலவியது .இதனால் ,சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் பலர் அவதியுற்றனர்.இதை போக்கும் வகையில், திங்கட்கிழமை மாலை மதுரையிலுள்ள பழங்காநத்தம், காளவாசல், மாடக்குளம், அழகப்ப நகர் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் ,மதுரை நகரில் மாலை நேரத்தில் குளிர்ந்த காற்று வீச தொடங்கியதால் வெப்பம் தணிந்தது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu