மதுரை மாவட்டத்தில் பலத்த மழை: குளம் போல மாறிய சாலைகள்

மதுரை மாவட்டத்தில் பலத்த மழை: குளம் போல மாறிய சாலைகள்
X

மதுரையில் பெய்த கனமழையால் குளம் போல மாறிய சாலைகள்.

Heavy Rain Today -மதுரை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் சாலைகள் அனைத்தும் குளம் போல் மாறியுள்ளன.

Heavy Rain Today -வட இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், மதுரை, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன் காரணமாக நேற்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இந்த மழை இரவிலும் தொடர்ந்து பெய்து வந்தது. மேலும் இன்றும் வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் அநேக மாவவட்டங்களில் கனமலை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மதுரை நகரில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இவ்வாறு பெய்து வரும் மழையால், மதுரையில், அண்ணாநகர், யாகப்பா நகர், வண்டியூர், புதூர், பழங்காநத்தம், திருப்பாலை ,அய்யர் பங்களா, கருப்பாயூரணி, மற்றும் கே.கே .நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் பெய்த மழை நீரானது சாலையில் வழிந்து ஓட வழியில்லாமல் ஆங்காங்கே குளம் போல தேங்கியுள்ளது. இதனால், இப்பகுதியில் சாலைகளில் செல்லும் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் கடும் அவதி அடைந்துள்ளனர்.

இது குறித்து, மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும், சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், மதுரை மேலமடை, வீரவாஞ்சி தெரு, ஜூபிலி டவுன், கோமதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் கொப்பளித்து வெளியேறி வருகிறது. இதனால், கொசுத்தொல்லை பெருகுவது, துர்நாற்றம் வீசுகிறது என மக்கள் குற்றம் சாட்டினர்.

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் பல்வேறு சாலைகள் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டாலும், இன்னமும் பல வாடுகளில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. ஆகவே மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகள் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை பார்வையிட்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!