மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த மழை: சாலைகளில் தேங்கிய மழைநீர்

மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த மழை: சாலைகளில் தேங்கிய மழைநீர்
X

மதுரையில, பலத்த மழையால் அண்ணாநகர் வீரவாஞ்சி தெருவில், மழைநீர் பெருக்கெடுத்தது.

கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் பயிர்களுக்கு தேவைப்பட்ட தண்ணீர் கிடைத்தததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மதுரை,திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது

மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை மாலை பல இடங்களில் பலத்த மழை பெய்தது. மதுரை மாவட்டத்தில், பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவியது.மாலை 6 மணி அளவில், பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், பல இடங்களில் இடி மின்னலுடன்பலத்த மழை பெய்து, சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

மதுரை மாவட்டத்தில், சோழவந்தான், சமயநல்லூர், பரவை, விளாங்குடி, கருப்பாயூரணி, மேலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மதுரை நகரில் அண்ணா நகர், கேகே நகர், கோரிப்பாளையம், வண்டியூர், யாகப்பா நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழையால், மழைநீர் சாலையில் தேங்கின. மதுரை வீரவாஞ்சி தெருவில் மழை நீரானது, செல்ல வழி இல்லாமல் குளம் போல தேங்கின. மழை பெய்து, இரவில் சிறிய வெப்ப காற்று வீசியது .

பகல் நேரங்களில் கடினமான வெப்ப நிலவியதால், பலத்த மழை பெய்தும் கூட, வெப்பம் சற்று தான் குறைந்து இருந்தது. சோழவந்தான் பகுதிகளில், பெய்த மழையால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கொடிக்கால் மற்றும் மானாவாரி பயிர்களுக்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வந்தனர்.

கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் பயிர்களுக்கு தேவைப்பட்ட தண்ணீர் கிடைத்ததுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Next Story
ai based agriculture in india