தென் மாவட்டங்களில், தொடர்ந்து பலத்த மழை: சாலைகளில் தேங்கிய மழைநீர்.

தென் மாவட்டங்களில், தொடர்ந்து பலத்த மழை: சாலைகளில் தேங்கிய மழைநீர்.
X

தென் மாவட்டங்களில் பலத்த மழை.

தென் மாவட்டங்களில், தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் சாலைகளில் ஆறு போல மழைநீர் ஓடி வருகிறது.

மதுரை திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த மழை:

மதுரை:

மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில், பலத்த மழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டத்தில், சோழவந்தான், வாடிப்பட்டி, பரவை செக்காரூரணி, ஊமச்சிகுளம், அழகர்கோவில், வரிச்சூர், கருப்பாயூரணி, திருமங்கலம், கல்லுப்பட்டி, சேடப்பட்டி, பேரையூர், உள்ளிட்ட பகுதிகளிலும், திண்டுக்கல் மாவட்டத்தில், நிலக்கோட்டை, விளாம்பட்டி, பள்ளப்பட்டி, சிலுக்குவார்பட்டி, மட்டப்பாறை, வத்தலக்குண்டு, சித்திரேவு உள்ளிட்ட பகுதிகளிலும் கடந்த இரு தினங்களாக நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

பகல் பொழுதில் கடுமையான வெப்பநிலை நிலவினாலும், மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

பலத்த மழையால், தெருக்களில் மழை நீர் தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது. மதுரை நகரில் அண்ணா நகர் பகுதிகளில், மருதுபாண்டியர் தெரு ,வீரவாஜி தெரு, கோமதிபுரம் சௌபாக்கியா தெரு , சித்தி விநாயகர் கோவில் தெரு, குளம் போல காட்சியளிக்கின்றன.

தெருவில் மழைநீர் குளம் போல தேங்கியுள்ளதால், இரவு நேரங்களில் அவ்வழியா செல்வதற்கு பொதுமக்கள் அஞ்சுகின்றனர். மதுரை மாநகராட்சி நிர்வாகம் சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும், சாலைகள் மோசமாக இருப்பதால், தேங்கியுள்ள மழை நீரில் பொதுமக்கள் தவறி விடுகின்ற நிலை ஏற்படுகிறது. ஆகவே, சாலைகளையும் விரைவில் சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!