/* */

பள்ளி மாணவர்களுக்கு அவரவர் மத கருத்துகளை போதிக்க வேண்டும்: விஎச்பி வலியுறுத்தல்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அவரவர் மதம் சார்ந்த கல்வியை மதச்சார்பற்ற தமிழக அரசு கற்றுத்தர வேண்டும் மதுரையில் தெரிவித்தார்

HIGHLIGHTS

பள்ளி மாணவர்களுக்கு அவரவர் மத கருத்துகளை போதிக்க வேண்டும்: விஎச்பி வலியுறுத்தல்
X

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மத கருத்துகளை கற்று கொடுக்க அவரவர் மதங்களில் சமயக்கல்வியை கற்றுத்தர வேண்டும் என விசுவ ஹிந்து பரிஷத் இணை பொதுச் செயலாளர் ஸ்தாணுமாலையன் தெரிவித்தார்.

மதுரையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது: மதுரையில் ஜூன் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் துறவிகள் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில், 300 -க்கும் மேற்பட்ட துறவிகள் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் உள்ள ஆதீனங்கள், இந்து அமைப்புகள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளியில் மத கருத்துகளை கற்று கொடுக்க அவரவர் மதங்களில் சமயக்கல்வியை கற்றுத்தர வேண்டும்.

தமிழகத்தில் மாணவர்களுக்கு முறையான கல்வி முறை இல்லாத காரணத்தால், மாணவர்கள் தவறான பாதைக்கு செல்கிறார்கள், கிறிஸ்தவ பள்ளிகளில் மத மாற்றங்கள் நடைபெறுகிறது. திருவள்ளூரை கிறிஸ்தவர் ஆகவும், சைவ, வானவன் வழிபாட்டு முறைகளை கிறிஸ்தவர்களின் தோமா வழிபாட்டு முறையென மாற்றப்பட்டுள்ளது .

உடன், மதுரை நிர்வாகி வேணுகோபால், தினமலர் நாளிதழ் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, மதுரை தேவகி மருத்துவமனை நிறுவனர் டாக்டர் நாகேந்திரன், மாநில துணை தலைவர் கதிர்வேல் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 13 May 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  2. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  5. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  6. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  7. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி முக்கொம்பு மேலணையின் ஷட்டர் பழுதுபார்ப்பு பணி துவக்கம்
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!