காந்தி ஜெயந்தியையொட்டி சோழவந்தான் வட்டாரத்தில் நடந்த கிராம சபை கூட்டங்கள்

காந்தி ஜெயந்தியையொட்டி சோழவந்தான் வட்டாரத்தில் நடந்த கிராம சபை கூட்டங்கள்
X

காந்தி ஜெயந்தியையொட்டி சோழவந்தான் வட்டாரத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

காந்தி ஜெயந்தியையொட்டி சோழவந்தான் வட்டாரத்தில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.

சோழவந்தான் மேலக்கால், விக்கிரமங்கலம் பகுதி ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

முதலைக்குளம் ஊராட்சியில், நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், தலைவர் பூங்கொடி பாண்டி,துணைத் தலைவர் ரேவதி பெரிய கருப்பன், ஊராட்சி செயலாளர் பாண்டி, பற்றாளர் பாலமுருகன் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஒத்த வீடு முதல் முதலைக்குளம் வரை புதிய தார் சாலை மற்றும் சிறிய பாலங்கள் அமைக்க தீர்மானம் நிறை வேற்றப்பட்டது தூய்மை பணி யாளர்களுக்கு சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.

விக்கிரமங்கலம் ஊராட்சி சார்பாக, நரியம்பட்டியில், நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தலைவர் கலியுக நாதன் துணைத் தலைவர் செல்வம் செல்வி கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் பால்பாண்டி அறிக்கை வாசித்தார். பற்றாளர் சங்கர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சியில், கிராம வளர்ச்சிக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பானா மூப்பம்பட்டி ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் மகாராஜன் தலைமையில் துணைத் தலைவர் ஆறுமுகம் முன்னிலையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் பாண்டி அறிக்கை வாசித்தார். பற்றாளர் சந்திரா மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை அனைத்து வீடுகளுக்கும் கொண்டு செல்லும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .

எரவார் பட்டி ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் (பொறுப்பு) செந்தாமரை, ஊராட்சி செயலாளர் மலைச்சாமி பற்றாளர் ரூபி அருள்மணி உள்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதேபோல், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மேலக்கால் ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி வீரபத்திரன், துணைத் தலைவர் சித்தாண்டி முன்னிலையில் ஊராட்சி செயலாளர் விக்னேஷ் அறிக்கை வாசித்தார். கூட்டத்தில், குடிநீர் தெரு விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக சென்று சேர்வதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, தூய்மை பணியாளர்களை கௌரவப்படுத்தும் வகையில், அவர்களுக்கு சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.

தென்கரை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா ஐயப்பன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கிருஷ்ணன் முன்னிலையில், ஊராட்சி செயலாளர் முனியராஜ் அறிக்கை வாசித்தார். இதில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல், துணைத்தலைவர் கேபிள் ராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். ஊராட்சி செயலாளர் மனோபாரதி மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

நாச்சிகுளம் ஊராட்சியில், தலைவர் சுகுமாரன் தலைமையில் துணைத் தலைவர் ரேவதி, செயலாளர் கதிரேசன் கலந்து கொண்டனர். காடு பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் தலைமையில் செயலர் ஒய்யனன் முன்னிலையில் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், துணை ஆட்சியர் முத்துகிருஷ்ணன் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அனைத்து ஊராட்சிகளிலும், தூய்மை பணயாளர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி உற்சாகப்படுத்தினர்.

அந்தந்த ஊராட்சிகளில், ஊராட்சிகளின் அடிப்படை மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கான தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!