பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர்.

மதுரயைில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், பழைய பென்ஷன் திட்டத்தை கொடுத்து புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், பெட்ரோல் விலை குறைக்கவும், சம்பளம், அகவிலைப்படி கோரிக்கையையும் முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், மதுரை மாவட்ட ஊழியர் சங்க இணைச் செயலாளர் சந்திரன் மற்றும் தமிழக நூலகத்துறை இளங்கோ சத்துணவுத் ஊழியர் கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கொடிவேரியில் பரிசல் சவாரிக்கு லைப் ஜாக்கெட் இனி கட்டாயம்..!