தடுப்பூசி போடுங்க.. இலவசமா சாப்பிடுங்க: மதுரை ஹோட்டல் அதிரடி

தடுப்பூசி போடுங்க.. இலவசமா சாப்பிடுங்க:  மதுரை ஹோட்டல் அதிரடி
X

திருமங்கலம் பாரத் ரெஸ்டாரன்ட்.

தடுப்பூசி போட்டுக்கொண்டால் சாப்பாடு இலவசம் என்ற மதுரை ஹோட்டலின் அறிவிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

திருமங்கலம் நகர் நான்கு வழிச்சாலை உசிலம்பட்டி ரோடு சந்திப்பில் உள்ள பாரத் ரெஸ்டாரண்டில் இன்றும் நாளையும் (அக்டோபர் 29,30) என இரு தினங்கள் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில், கலந்து கொண்டு முதல் டோஸ் அல்லது இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடுபவர்களுக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.

இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு, கொரோனா தடுப்பூசி போட்டுச் செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து திருமங்கலம் பாரத் ரெஸ்டாரன்ட் உரிமையாளர் பாரத் கூறுகையில், கொரோனா பெரும் தொற்று நம் நாட்டை விட்டு ஒளிவதற்கு நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த இலவச உணவு வழங்கும் நடைமுறையை விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளேன் என தெரிவித்தார்.

ஹோட்டலின் இந்த அறிவிப்பு அப்பகுதி பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags

Next Story