மதுரை அருகே திருமங்கலத்தில் விலையில்லா மிதிவண்டிகள் : நகராட்சி தலைவர் வழங்கினார்

மதுரை அருகே திருமங்கலத்தில் விலையில்லா மிதிவண்டிகள் : நகராட்சி தலைவர் வழங்கினார்
X

மதுரை அருகே திருமங்கலத்தில், பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகள் வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில், பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

மதுரை:

திருமங்கலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 780 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பி .கே .என் தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பிளஸ் ஒன், பிளஸ் டூ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலை இல்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில், நகராட்சித்தலைவர் ரம்யா முத்துக்குமார் ,கலந்துகொண்டு, தமிழ்நாடு பள்ளியில் பயிலும் 260 மாணவிகளுக்கு 260 அரசின் விலையில்லா மிதிவண்டிகளும், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 418 மாணவிகளுக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகளும் வழங்கினார்.

இவ்விழாவில் , திருமங்கலம் நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.. ஆண்டு தோறும் பள்ளியில் பிளஸ்-2, பிளஸ்-1 படிக்கும் மாணவிகளுக்கு, அரசு சார்பில் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது.இதனை, தமிழக அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், பள்ளி நிர்வாகிகளை வைத்து வழங்கி வருகின்றனர்.

பள்ளி மாணவர்கள் படிப்பதற்கு எந்த வகையிலும் தடை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ. மாணவிகளுக்கு ஆண்டுதோறும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கல்வி எல்லா மாணவர்களுக்கும் சென்றடையவேண்டும் என்ற இலக்குடன் தமிழக அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது மட்டுமல்லாமல் விலையில்லா பாடப்படுத்தகங்கள், விலையில்லா மடிக்கணினி, காலை மற்றும் மதிய உணவு என்று கல்வியை வளர்ப்பதற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவது சிறப்புக்குரியது.

Tags

Next Story
கடம்பூர் அருகே யானைகளுக்கு ராகி உணவு சமைத்து படையலிட்ட பழங்குடியின மக்கள்!