கச்சத் தீவை மீட்க மத்திய மாநில அரசுகள் முயலவேண்டும்: ஒபிஎஸ்
மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக முன்னாள் முதல்வர் ஓ பி எஸ்.
Former CM OPS Interview
தமிழகத்தில் அதிமுக இரு அணிகளாக பிரிந்துள்ளது. முன்னாள் முதல்வர்கள் இபிஎஸ் தலைமையில் ஒரு அணியும், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணியும் உள்ளன. இந்த லோக்சபா தேர்தலுக்குஇரு அணிகளும் ஒன்று சேர்ந்து களத்தில் இறங்கினால் நிச்சயம் டஃப் பைட்ஆக இருக்கும். ஆனால் இரு அணிகளும் ஒன்று சேர்வது போல் தெரியவில்லை. இதனால் ஓபிஎஸ் பாஜ மற்றும்அமமுகவோடு சேர்ந்து களம் இறங்க உள்ளார் என்பது போல் தெரிகிறது. இபிஎஸ் தனியாக இருக்கும் கட்சிகளோடுகூட்டணி வைத்து தேர்தலைச் சந்திக்க உள்ளது. இந்நிலையில் சென்னை செல்ல மதுரை விமானநிலையத்துக்கு வந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேட்டியளித்தார். இதோ உங்களுக்காக
மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
*மேகதாது விவகாரம் குறித்த கேள்விக்கு:
தமிழக அரசு அனுமதி இல்லாமல் மேகதாதுவில் கர்நாடகா அரசு எந்த அணையும் கட்ட முடியாது.
இலங்கை மீனவர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவது குறித்த கேள்விக்கு:
நீண்ட நாள் கோரிக்கை கட்சத்தீவை மீண்டும் பெற வேண்டும் என்று மத்திய மாநில அரசு இதனை கவனம் செலுத்த வேண்டும்
சட்டமன்றத்தில் இருக்கை தொடர்பான கேள்விக்கு:
சட்டமன்றத்தில் இருக்கை மாற்றம் தொடர்பாக கேள்வி கேட்டதற்கு அவர்களாகவே தந்தார்கள், அவங்களாகவே எடுத்துக் கொண்டார்கள் எந்த வருத்தமும் கிடையாது.
பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு:
தேசிய தலைவர்களை சந்திக்க சென்றால், உங்களிடம் சொல்லிவிட்டு தான் செல்வேன்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu