மதுரை அருகே திருமங்கலத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினம்

மதுரை அருகே திருமங்கலத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினம்
X

மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்பட்டத்துக்கு மரியாதை செய்த , முன்னாள் திமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள்

மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் முன்னாள் திமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் மரியாதை

கருணாநிதியின், நான்காவது ஆண்டு நினைவு தினம்: உருவப்படத்துக்கு திமுகவினர் மலர் தூவி மரியாதை:

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் மறைந்த முதல்வரும் , திமுக தலைவருமான கலைஞரின் நான்காவது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் , முன்னாள் திமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட 1000 -க்கும் மேற்பட்டோர் , கருப்பு நிற உடை அணிந்து கைகளில் திமுக கட்சி கொடி ஏந்தி திருமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் இருந்து , கட்சி அலுவலகம் வரை மதுரை - திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் , ஊர்வலமாக அமைதிப் பேரணி நடத்தினர். அதனைத்தொடர்ந்து, கட்சி அலுவலகத்தில் கருணாநிதியின், பிரம்மாண்ட திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

Tags

Next Story