மதுரை பூ வணிக வளாகத்தில் குவிந்துள்ள பூ கழிவுகள் அப்புறப்படுத்தப்படுமா ?

மதுரை  பூ  வணிக வளாகத்தில்  குவிந்துள்ள  பூ கழிவுகள் அப்புறப்படுத்தப்படுமா ?
X
மதுரை மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு, மாட்டுத்தாவணி பூ வணிக சந்தையில், குவிந்துள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும்

மதுரை பூ வணிக சந்தையில் அள்ளப்படாத குப்பையால், துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் பூக்கள், காய் பழங்களுக்கு என விற்பனை சந்தை செயல்படுகிறது. இங்கு தினசரி பூக்கள் பல்வேறு இடங்களிலிருந்து விவசாயிகளால் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.பூ மார்க்கெட்டை சுற்றி சில்லரை விற்பனைக்கு பூக்கள் விற்கப்படுகிறது. கடந்த சில நாள்களாக தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால், விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பூக்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வியாபாரிகள், விற்காமல் உள்ள பூக்களை, குப்பைகள் போல பூ சந்தை வளாகத்தின் உள்ளே குவித்து வைத்துள்ளனர். இதனால், அப்பகுதியில், துர்நாற்றம் வீசூம் நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு, பூ வணிக சந்தையில் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற, பூ வணிக சங்கமானது, வியாபாரிகளிடம், பணம் பெறுவதாகவும், சிலர் தெரிவித்தனர்.ஆகவே, மதுரை மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு, மதுரை மாட்டுத்தாவணி பூ வணிக சந்தையில், குவிந்துள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story