மதுரை அருகே கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர்

மதுரை அருகே கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர்
X

மதுரை அருகே கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு வீடுகளை சூழ்ந்துள்ள கால்வாய் நீர்.

மதுரை அருகே கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

விளாச்சேரி அருகே நிலையூர்- கம்பிக்குடி கால்வாயில் மதகு உடைப்பு ஏற்பட்டு வடிவேல் கரையில் வெள்ளம் புகுந்தது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், நாகமலை புதுக்கோட்டை- விளாச்சேரி வழியாக நிலையூர் - கம்பிக்குடி கால்வாய்க்கு நீர் நிலையூர் கண்மாய் பகுதி வழியாக வருகிறது.

இந்நிலையில், விளாச்சேரி கால்வாய்க்கு வரும் தண்ணீர் வடிவேல் கரை கிராமம் அருகே உள்ள மதகு உடைப்பு ஏற்பட்டு இடையில் தம்பிக்குடி கால்வாய்க்கு செல்லும் நீர் முழுவதும் வடிவேல் கரை கிராமத்திற்குள் சென்றது.


இதனால் வடிவேல் கரை கிராமத்தில் வயல்வெளிகள் மற்றும் வீடுகளில் வெள்ளத்தில் சிக்கியது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வடிவேல் கரை மதகை சரி செய்யும் பணியை செய்து வருகின்றனர்.

மதகு உடைந்து திடீரென புகுந்த வெள்ள நீரால் வடிவேல் கரை பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

ஆண்டு தோறும் மழைக்காலங்களில் இந்த மதகினால் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!