மதுரையில் மனிதநேய மக்கள் கட்சி கொடியேற்று விழா

மதுரையில் மனிதநேய மக்கள் கட்சி கொடியேற்று விழா
X

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் முகமது கவுஸ் கொடியேற்றினார்.

மதுரையில் மனிதநேய மக்கள் கட்சி கொடியேற்று விழா விமரிசையாக நடைபெற்றது.

மனிதநேய மக்கள் கட்சியின் 14ம் ஆண்டு துவக்க விழா, மதுரையில் நடைபெற்றது. இதை முன்னிட்டு, கே புதூர், ஒத்தக்கடை உட்பட 5 இடங்களில் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. மாநில துணைப் பொதுச்செயலாளர் முகமது கவுஸ் கொடியேற்றினார்.

மாவட்டத் தலைவர் சீனிஅகமது, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் அப்பாஸ், தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் சையது ராஜா, காஜா மைதீன், ஊடக அணி மாவட்ட செயலாளர் தாகாமைதீன், தெற்கு மாவட்டச் செயலாளர் மகபூப் பாஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture