திருமங்கலம் அருகே நடைபெற்ற மீன்பிடித் திருவிழா: திரண்ட கிராம மக்கள்.

திருமங்கலம் அருகே நடைபெற்ற மீன்பிடித் திருவிழா: திரண்ட கிராம மக்கள்.
X

திருமங்கலம் அருகே நடைபெற்ற மீன்பிடித்திருவிழாவில் பங்கேற்ற கிராம மக்கள்

திருமங்கலம் அருகே 8 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற மீன் பிடி திருவிழாவில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மீன் பிடித்தனர்

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே 8 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற மீன் பிடி திருவிழா - 500க்கும் மேற்பட்டோர் ஊருணியில் இறங்கி மீன் பிடித்து உற்சாகம் அடைந்தனர்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே மதிப்பனூர் கிராம ஊருணியில் கடந்த எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஊரணி வற்றியதால்,இன்று காலை கிராம மக்கள் சார்பில் முடிவு எடுக்கப்பட்டு மீன் பிடிப்பது என தீர்மானித்து , கிராம பஞ்சாயத்தில் உள்ள மேட்டுப்பட்டி , மதிப்பனூர், நாகையாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் ஊரணியில் ஒரே நேரத்தில் ஒன்று திரண்டு ,

ஊரணியில் இறங்கி மீன் பிடித்தனர். 8 வயது சிறுவர் , சிறுமி முதல் 80 வயது முதியோர் வரை மீன்பிடிப்பதில் போட்டா போட்டி போட்டுக் கொண்டு, கெளுத்தி, கட்லா, விரால், ஜிலேபி, லோகு உள்ளிட்ட வகையான மீன்களை பிடித்து சென்றனர் .இதில், சிலர் வலைகளை போட்டும் மீன்களைப் பிடித்தனர்.

எட்டு ஆண்டுகளுக்கு பின்பு , கிராம மக்கள் ஒன்றிணைந்து குடும்பம், குடும்பமாக ஒரே இடத்தில், இந்த மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்ட சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே மிகுந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தனர்.இந்த மீன் பிடி திருவிழாவில், ஒவ்வொருவரும் இரண்டு கிலோ முதல் 10 கிலோ வரை மீன்களை பிடித்து சென்றனர்.

Tags

Next Story
கடம்பூர் அருகே யானைகளுக்கு ராகி உணவு சமைத்து படையலிட்ட பழங்குடியின மக்கள்!