மதுரை அருகே நிதி நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை: கிரைம் செய்திகள்..

மதுரை அருகே நிதி நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை: கிரைம் செய்திகள்..
X

பைல் படம்.

மதுரை அருகே நிதி நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை அருகே வரிச்சியூர் வைத்தியநாதபுரம் ஆறுமுகம் மகன் ரஞ்சித் 23. இவர் மதுரையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார் .இந்த நிலையில் அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது . இதனால் மன அழுத்தத்தில் இருந்த டிரைவர் ரஞ்சித் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவருடைய தந்தை ஆறுமுகம் கருப்பாயூரணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவர் ரஞ்சித்தின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வியாபாரியை தாக்கி வழிப்பறி

திருப்பரங்குன்றம் நிலையூர் மாருதி காலனியை சேர்ந்தவர் ஹரி மூர்த்தி மகன் வெங்கடேஷ் 38. இவர் வண்டியில் போலி தயாரித்து விற்பனை செய்து வந்தார்.இவர் ரயில்வே பாலம் அருகே சென்றபோது மூன்று வாலிபர்கள் அவரை வழிமறித்தனர். அவர்கள் அவரை தாக்கி அவரிடமிருந்து ரூ 2ஆயிரத்தை வழிப்பறி செய்துவிட்டனர். இந்த சம்பவம் குறித்து வெங்கடேஷ் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் பணம் பறித்த மூன்று ஆசாமிகளையும் தேடி வருகின்றனர்.

அரசு பஸ் டிரைவரிடம் வழிப்பறி

மதுரை ஜன 23 திருமங்கலம். உத்தண்டன் தெரு சலீம்பாஷா 50 இவர் அரசு பஸ்டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் வ உ சி பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அவரை டூவீலரில் வந்த இரண்டு ஆசாமிகள் வழிமறித்து பின் மண்டையில் தாக்கினர்.இதனால் மயங்கி விழுந்த அவரிடமிருந்து ரூ2ஆயிரத்தை பறித்துச் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து டிரைவர் சலீம் பாஷா எஸ் எஸ் காலனி போலீஸில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவரிடம் பணம் பறித்த பைக் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

கடன் தொல்லையில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

ரயில்வே காலனி முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் 47. இவர் பல்வேறு இடங்களில் கடன் வாங்கியுள்ளார் .கடன் கொடுத்தவர்கள் அவரை திருப்பி கேட்டு தொந்தரவு செய்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெயக்குமார் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து மனைவி பிரேமா கரிமேடு போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயக்குமாரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளை கும்பல் கைது

மதுரை ஜன 23 மேல அனுப்பானடி இருட்டு பங்களா அருகே பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்தனர்.

கீரைத்துரை போலீசார் மேல அனுப்பானடி பகுதியில் தொடர்ந்துரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் இருட்டு பங்களா அருகே சென்றபோது கும்பல் ஒன்று பதுங்கி இருந்ததை கண்டனர். அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர் .அவர்களிடம் பயங்கர ஆயுதங்கள் இருந்தன. பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பேகம்பூர் செல்வராஜ் மகன் ஜீசஸ் ரூபன் என்ற ரூபன் 30, திருச்சி அரியமங்கலம் நேருஜி தெரு ராஜா சதீஷ் மகன் மணிகண்டன் 26, மதுரை காமராஜர் புரம் திருவிக தெரு நவசக்தி மகன் மாதவன் 18, தென்பழனி தெற்கு தெரு ராஜாங்க மகன் ராஜேஷ் 30, பழனி அடிவாரம் சேதுபதி மகன் பூபாலன் 32 ஆகியவர்கள் என்று தெரியவந்தது. அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து வாள் ஒன்றையும் பட்டாகத்தி ஒன்றையும் செல் ஒன்று இரண்டு பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நோக்கத்துடன் அங்கு பதுங்கி இருந்தது தெரிய வந்தது.

கோவில் நீர்மூழ்கி மோட்டார் திருட்டு

மதுரை ஜன 23 மதுரை அருகே கோயிலில் நீர்மூழ்கி மோட்டார் திருடிய இரண்டு வாலிபர்களை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

திருநகர் சௌபாக்கிய நகர் நான்காவது தெருவில் ‌ சிரிராம விலாஸ் காலனியில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரி ராஜா 44. இந்த கோயிலில் சம்பவத்தன்று இரண்டு வாலிபர்கள் நீர்மூழ்கி மோட்டாரை திருடி கொண்டிருந்தனர். இந்த சம்பவத்தை கண்ட பூசாரி ராஜா பொதுமக்களுடன் திருட்டு வாலிபர்களை பிடித்தனர். அவர்களை திருநகர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் பிடிபட்ட வாலிபர்களிடம் விசாரித்த போது தென்காசி ரயில்வே கேட் தெரு ஆண்டிமகன் சதீஷ் 36, தேனி வாய்க்கால் பட்டி மேலத்தெரு பன்னீர்செல்வம் மகன் கௌதம் ராம்குமார் 21 என்று தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story