மதுரையில் மாமனார் வெட்டிக்கொலை: மருமகன் உள்பட இரண்டு பேர் கைது
பைல் படம்
காந்தி கிராம சுகாதார நிறுவன இயக்குநருக்கு எதிரான வழக்கில் அரசுத் தரப்பில் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு.
மதுரை நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் பேராசிரியர் தெய்வேந்திரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது. காந்தி கிராம சுகாதாரம் மற்றும் குடும்ப நல அறக்கட்டளையில் விரிவுரையாளராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். தற்போது இயக்குனராக பணியாற்றும் சீத்தாலட்சுமி, 67 வயதை தாண்டிய நிலையில் இன்னும் பணியில் தொடர்கிறார். அவருக்கு ரூ.1.5 லட்சம் ஊதியம் வழங்கப்படுகிறது.
இவரது தகுதியை எதிர்த்த வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. ஓய்வு பெற்றபின் அவருக்கான ஊதியம் என்பது பென்ஷனாகத் தான் இருக்க வேண்டும். ஆனால், அவருக்கு ஊதியமாக வழங்குவதன் மூலம் அரசுக்கு ரூ.15 லட்சம் வரை இழப்பு ஏற்படுகிறது. 7வது ஊதியக்குழு பரிந்தரை இவருக்கு பொருந்தாத நிலையில், நிலுவைத் தொகையாக ரூ.5 லட்சம் வரை எடுக்கப்பட்டுள்ளது. ஊதியத்துடன், திட்டப் பணிகளில் இருந்தும் ரூ.22 லட்சம் வரை எடுக்கப்பட்டுள்ளது. உரிய அனுமதியின்றி வாகனம் வாங்கப்பட்டுள்ளது. திட்டத்தை செயல்படுத்துவதில் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதுபோல் பல்வேறு வகையான குற்றசாட்டுகள் அவர் மீது உள்ளது. ஊழியர்கள் பலருக்கு மெமோ கொடுத்துள்ளார். பலரை சஸ்பெண்ட் செய்துள்ளார். எனவே, அவர் மீதான குற்றசாட்டுகள் குறித்து முறையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யாநாராயண பிரசாத் ஆகியோர் நிதி வழங்கும் மத்திய அரசுக்கும், ஒன்றிய லஞ்ச ஒழிப்பு ஆணையம், ஒன்றிய தணிக்கைத் துறை முதன்மை கணக்காளர், தமிழக தணிக்கைத் துறை உதவி இயக்குநர், நிறுவன நிதிக்குழு தலைவர் உள்ளிட்டோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
தெற்குவாசலில் மாமனார் வெட்டிக்கொலை மருமகன் உள்பட இரண்டு பேர் கைது .
தெற்கு வாசலில் குடும்ப பிரச்சனையில் மாமனாரை பட்டா கத்தியால் வெட்டிக்கொலைசெய்த மருமகன் உள்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
தெற்குவெளி வீதி எஸ் எஸ் ரோட்டை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவருடைய மருமகன் பிரபாகரன். இவரது மகளுக்கும் மருமகனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனியாக வசித்து வருகின்றனர்.இது தொடர்பாக நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்த.து இந்த நிலையில் மாமனார் பாலசுப்பிரமணி தெற்குவெளி வீதி நாடார் வித்தியாசாலை பள்ளிரோடு அருகே ஜெராக்ஸ் கடைமுன்பாக சென்றபோது நேற்று இரவு அவரை வழிமறித்த மருமகன் பிரபாகரன், மற்றொருவர் மகாலிங்கம், பாலகிருஷ்ணன், கருப்பசாமி, ஆகிய நான்கு பேரும் அவரை இரும்பு கம்பியாலும் பட்டாக்கத்தியாலும் சரமாரியாக தாக்கி வெட்டிஉள்ளனர். இதில் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மாமனார் பாலசுப்பிரமணி பலியானார் .
இந்த கொலை தொடர்பாக அவருடைய மகன் இளஞ்செழியன் தெற்கு வாசல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை செய்யப்பட்ட பாலசுப்பிரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த னர். இந்த கொலை தொடர்பாக மருமகன் பிரபாகரனையும் மற்றொருவர் கருப்பசாமியையும் கைது செய்தனர்.மற்ற இருவரையும் தேடிவருகின்றனர்.
திருமலைராயர் படித்துறையில் கொடுக்கல் வாங்கல் தகராறில் பெட்டிக்கடைக்காரர் மீது தாக்குதல்:வாலிபர் கைது.
மதுரை திருமலைராயர் படித்துறை தைக்கால் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் பொன்னம்பலம்( 41 ) .இவர் திருமலை ராயர்படித்துறையில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். செல்லூர் மேலதோப்புவை சேர்ந்தவர் ராஜூமகன் கல்யாணி. இவருக்கும் பெட்டி கடைக்காரருக்கும் பணம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று பொன்னம்பலத்தின் கடைக்கு சென்ற கல்யாணி அவரை தரக்குறைவாக பேசி தாக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து பொன்னம்பலம் விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய வாலிபர் கல்யாணியை கைது செய்தனர்.
எஸ் எஸ் காலனி அம்பேத்கர் நகரில் குடிபோதையில் இளம்பெண் மீது தாக்குதல்:வாலிபர் கைது.
எஸ் எஸ் காலனி அம்பேத்கர் நகர் சர்ச் தெருவை சேர்ந்தவர் செல்வம் மகன் வினோத் இவர் குடிபோதையில் அந்த பகுதியில் உள்ள வீட்டின் கதவை தட்டி உள்ளார். அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் அவரின் செயலை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் வினோத் அந்த பெண்ணை ஆபாசமாக பேசி தாக்கி உள்ளார். இந்த சம்பவம் குறித்து அந்த பெண் எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து குடிபோதையில் கதவைத் தட்டி ஆபாசமாக பேசி பெண்ணை தாக்கிய வாலிபர் வினோத்தை கைது செய்தனர்.
எல்லிஸ் நகரில் ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை.
மதுரைடி எல்லீஸ்நகரில் ஆட்டோடிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எல்லீஸ் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சக்திவேல் 51 .இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. ஆட்டோ ஒட்டி வந்தார்.இவர் சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி மாரியம்மா எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார்.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் சக்திவேலின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்லூர் தாகூர் நகர் கண்மாய் கரையில் கஞ்சா செடி, கஞ்சாவுடன் வாலிபர் கைது.
மதுரை செல்லூர் தாகூர் நகர் கண்மாய்க்கரையில் கஞ்சா செடி மற்றும் கஞ்சாவுடன் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
செல்லூர் சப் இன்ஸ்பெக்டர் அப்பாஸ். இவர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார்.இவர் தாகூர் நகர் கண்மாய்க்கரை வழியாக சென்றபோது சந்தேகப்படும் படியாக நின்ற வாலிபர் ஒருவரை பிடித்தார். அந்த வாலிபரிடம் விசாரித்த போது அவர் செல்லூர் மணவாளன் நகர் இரண்டாவது தெருவை சேர்ந்த அறிவழகன் மகன் தினேஷ் குமார் என்ற அறிவு( 27 )என்று தெரிய வந்தது. அந்த வாலிபரிடம் சோதனை செய்தபோது அவர் ஒரு 1 1/4 கிலோ கஞ்சாவையும் 14 கிராம் எடையுள்ள கஞ்சா செடிகளையும் பதுக்கி வைத்திருந்தார். அவரிடம் தொடர்ந்து விசாரித்து செய்த போது கண்மாய்க்கரை பகுதியில் ரகசியமாக கஞ்சா செடி வளர்க்க அவர் திட்டமிட்டு இருந்ததும் தெரிய வந்தது.இதைத்தொடர்ந்து தினேஷ் குமாரை போலீசார் கைது செய்து கஞ்சாச் செடியையும், கஞ்சாவையும் பறிமுதல் செய்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu