மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக விவசாய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக விவசாய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
X

திருமங்கலத்தில், பா.ஜ.க. எம்.பி.யைக் கண்டித்து சம்யுக்தா கிஷான் விவசாய சங்கத்தினர்  ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக திருமங்கலத்தில் விவசாய அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருமங்கலத்தில், பா.ஜ.க. எம்.பி.யை, கண்டித்து சம்யுக்த கிஷான் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக இந்திய மல்யுத்த கழக தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண்சிங் மீது குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. அவர் மீது கோர்ட்டில் வழக்கும் தொடுக்கப்பட்டு உள்ளது.

அவர் மீதான குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணை நடத்தப்படாததாலும அவர் மீது எந்த வித நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்தும் மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் டெல்லியில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். தாங்கள் ஒலிம்பிக்கில் பெற்ற பதக்கங்களை கங்கையில் வீசப்போவதாகவும் கூறினார்கள்.

அப்போது கிஷான் விவசாய சங்க தலைவர்கள் இதில் தலையிட்டு வீராங்கனைகளை சமாதானம் செய்தனர். மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அமெரிக்க நாட்டில் சுற்றுப்பயணத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்த போராட்டம் பற்றி விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் உள்ள பாலியல் துன்புறுத்தல் செய்த பி.ஜே.பி. எம்பி -யை கைது செய்ய கோரியும், போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய டெல்லி போலீஸாரை கண்டித்தும், சம்யுக்த கிசான் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு, சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பைச் சார்ந்த 50க்கும் மேற்பட்டோர், மல்யுக்த வீரர்களை பாலியல் துன்புறுத்தல் செய்த பா.ஜ.க. எம். பி. பிரிஜ் பூசன் சரண் சிங்கை கைது செய்ய கோரியும், போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுக்த வீரர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய டெல்லி போலீசாரை கண்டித்தும், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதமர் மோடி இதற்கு எந்த நடவடிக்கை எடுக்காமல், செவி சாய்க்காமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!