மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்..!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் விவசாயிகள்  குறைதீர் கூட்டம்..!

விவசாயிகள் குறைதீர் கூட்டம் 

வாடிப்பட்டி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

வாடிப்பட்டி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

வாடிப்பட்டி :

மதுரை மாவட்டம்,வாடிப்பட்டி பகுதியில், உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில், மாதாந்திர விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்திற்கு, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பார்த்திபன் தலைமை தாங்கினார். பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சுபாஷினி, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் வெங்கடேஷ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல துணை தாசில்தார் தமிழ் எழிலன் வரவேற்றார்.


இந்த கூட்டத்தில், வாடிப்பட்டி பகுதியில், ஆண்டிபட்டி வாய்க்கால், துருத்தி ஓடை, விராலிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும்,வைகை கூட்டு குடிநீர் திட்டத்திற்கு குழாய்கள் பதிக்க தோணடிய பள்ளங்களை மூட வேண்டும் என்றும், தாலுகா அலுவலகத்தில் பாரத பிரதமர் விவசாயிகள் திட்ட முகாம் நடத்த வேண்டும் என்றும், வடகரைக் கம்மாய் செல்லும் வாய்க் கால்களை சீரமைக்க வேண்டும் என்றும், வாடிப்பட்டி சுற்றுப்புற கிராமங்களில் ஏற்படும் மின் தடையை சரி செய்ய புகார் தெரிவிக்க தகவல் தொடர்பு ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டது.

இதில், ஏராளமான விவசாயிகள் மற்றும் பிற துறை அலுவலர்கள் வருவாய் ஆய்வாளர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story