தொடர் குற்றங்களில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் கைது

தொடர் குற்றங்களில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் கைது
X

திருமங்கலம் பகுதியில் தொடர்கொள்ளையில் ஈடுபட்ட மணிவண்ணன்

மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி மற்றும் திருமங்கலம் பகுதிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

தென்பரங்குன்றத்தை சேர்ந்த மணிகண்டன் (எ) மணிவண்ணன் (35) பி.டி.ஆர் நகர் 2வது தெருவில் வசித்து வருகின்றார். இவர் மீது ஏற்கனவே கொலை ,கொலை முயற்சி வழக்கு ,ஆயுதம் வைத்திருத்தல், வழிப்பறி செய்தல் ,மேலும் வீட்டில் இருக்கும்போதே கொள்ளை அடித்து செல்வது போன்ற பல்வேறு வழக்குகள் இருந்தது.

மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடிவந்த நிலையில், திருப்பரங்குன்றம் பகுதியில் இருந்தபொழுது போலீசார் மணிவண்ணனை கைது செய்தனர்.

மேலும் அவனிடம் விசாரணை செய்ததில் திருமங்கலம் பகுதி ,ஆஸ்டின்பட்டி பகுதி கொள்ளை அடித்ததை குற்றவாளி ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் 6 பவுன் தங்க நகை மற்றும் பித்தளை பாத்திரங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் ஒரு லட்ச ரூபாய் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இவை அனைத்தும் திருமங்கலம் குதியில் கொள்ளையடித்தது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் போலீசார் குற்றவாளி மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர் .

தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கொள்ளையனை கைது செய்த உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மற்றும் அவருடைய தலைமையில் உடன் பணிபுரிந்த காவலர்களை மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் திருமங்கலம் துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் பாராட்டினர்

Tags

Next Story
ai solutions for small business