மதுரை அரசு ஐடிஐ -யில் பயிற்சிக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
மதுரை ஐடிஐயில் தொழிற் பயிற்சியில் விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு: முதல்வர் தகவல்:
மதுரை கோ. புதூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், பயிற்சியில் சேருவதற்கு விண்ணப்பிக்க, நவ. 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இப் பயிற்சி நிலையத்தில், டர்னர், மெசினிஸ்ட், இன்ஸ்டூமென்ட் மெக்கானிக் உள்ளிட்ட பயிற்சிக்கு விண்ணப்பிப் போருக்கு கடைசி நாள், நவ. 18-ம் தேதி கடைசி நாளாகும். பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது.மேலும்,பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு, மாதந்தோறும் ரூ. 750 உதவித் தொகை, இலவசமாக பயண அட்டை, மடிக்கனிணி, மிதிவண்டி, பாடபுத்தகங்கள் வழங்கப்படவுள்ளன. மேலும், வரைபடக் கருவிகள், உடைகள், தையற் கூலிகள், ஒரு செட் காலணிகள் ஆகியவையும் வழங்கப்படும். பிரபல நிறுவனங்களின் உதவியுடன் பயிற்சி மற்றும் உதவித் தொகைகள் வழங்கப்படும்.மேலும், தொடர்புக்கு எஸ். ரமேஷ் குமார், துணை இயக்குநர் மற்றும் முதல்வர். போன்:0452-2903020 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu