மதுரை அருகே எடப்பாடி பழனிசாமி தலைமையில்அதிமுக சார்பில் சமத்துவ திருமணம்

மதுரை அருகே  எடப்பாடி பழனிசாமி தலைமையில்அதிமுக சார்பில் சமத்துவ திருமணம்
X
உதயகுமார் மகள் பிரியதர்ஷினி உள்ளிட்ட 51 மணமக்களுக்கு மாங்கல்யத்தை எடுத்து தந்து சமத்துவ திருமணத்தை நடத்தி வைக்கிறார்

அதிமுக அம்மா பேரவையின் சார்பில் எடப்பாடியார் நடத்தி வைக்கும் 51 சமுதாய திருமண விழா நடைபெறும் இடத்தினை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பார்வையிட்டார்.

புரட்சித்தலைவரின் 106- வது பிறந்த நாளை முன்னிட்டும், புரட்சித்தலைவி அம்மாவின் 75 -வது பிறந்த நாளை முன்னிட்டும், கழக 51வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டும், கழக அம்மா பேரவையின் சார்பில், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் ஏற்பாட்டில், வரும் பிப்ரவரி 23 -ஆம் தேதிஅன்று 51 சமத்துவ சமுதாய திருமண விழா நடைபெறுகிறது. .

முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் மகள் பிரியதர்ஷினி-முரளி மணமக்கள் உட்பட 51 ஏழை,எளிய மணமக்களுக்கு சமத்துவ சமுதாய திருமணத்தை டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில், கழக இடைக்கால பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் தனது திருக்கரத்தால் நடத்தி வருகிறார். அதனைத் தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்ட 51 ஜோடி மணமக்களுக்கு திருமண நாளில் அணியும் மணமகளுக்கான முகூர்த்த பட்டு புடவை, மணமகனுக்கு முகூர்த்த பட்டு வேஷ்டிகளை ஏற்கெனவே வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, டி.குன்னத்தூரில் அம்மா திருக்கோயில் மணிமண்டபத்தில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் திருமண மேடைக்கான பந்தல், சமையல் செய்யும் கூடங்கள், உணவு அருந்தும் இடங்கள், வாகனம் நிறுத்தும் இடங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார் .

இதனைத் தொடர்ந்து, ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது: புரட்சித்தலைவி அம்மா தனது பிறந்த நாள் விழாவில், எத்தனை நலத்திட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் அவருக்கு பிடித்தமான நிகழ்ச்சி என்றால் ஒவ்வொரு ஆண்டும், அம்மாவின் திருப்பெயரால் நடைபெறும் திருமண நிகழ்ச்சி ஆகும்.ஏற்கெனவே, அம்மா பேரவையின் சார்பில், அம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு 60 திருமணங்கள், அதனைத் தொடர்ந்து 120 திருமணங்கள் நடைபெற்றது.

தற்போது, அம்மாவிற்கு பிடித்தமான இந்த திருமண விழாவை நடத்திட கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் கழக அம்மா பேரவைக்கு நல்ல வாய்ப்பினை வழங்கி உள்ளார். அவருக்கு கழக அம்மா பேரவையின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த திருமணத்தில் முகூர்த்த புடவை, வேஷ்டி, தாலிக்கு தங்கம், சீர்வரிசை பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எனது மகளுக்கு வழங்குவதைப் போல் ஒரே மாதிரியாக 51 ஜோடி மணமக்களுக்கும் வழங்கப்படுகிறது. 51 ஜோடி மணமக்களும் ஒரே மேடையில் அமரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 51 ஜோடி மணமக்களுக்கு எடப்பாடியார், தனது திருக்கரத்தால் திருமாங்கல்யத்தை எடுத்து நடத்தி வைக்கிறார்.

இந்த திருமணத்தில் பங்கேற்கும் மணமக்கள் பெற்றோர்கள், அவர்களின் உற்றார் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அமரும் வண்ணம் தகுந்த ஏற்பாடுகளும். மற்றும் அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 23 ஆம் தேதி காலை 9 மணிக்கு டி குன்னத்தூர் அம்மா கோவிலுக்கு வருகை தரும் எடப்பாடியாருக்கு பாரம்பரியமிக்க வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, அம்மா கோவிலில் உள்ள புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். அதனைத் தொடர்ந்து, தனது திருக்காரத்தால் எனது மகள் பிரியதர்ஷினி முரளி மணமக்கள் உள்ளிட்ட 51 ஏழை எளிய மணமக்களுக்கு மாங்கல்யத்தை எடுத்து தந்து சமத்துவ திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

இதில், தோழமைக் கட்சித் தலைவர்கள், தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், வியாபார பெருமக்கள் ,கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எல்லோரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகிறார்கள் என்று கூறினார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil