பசுமலையில் தொட்டுவிடும் தூரத்தில் மின்சார கம்பி..!
மின்சாரக் கம்பி விழுந்த பேருந்து.
திருப்பரங்குன்றம் பசுமலை அருகே அரசு பேருந்து மீது விழுந்த உயர் அழுத்த மின்சார கம்பி அதிர்ஷடவசமாக பயணிகள் அதிக அளவு இல்லை என்பதால் உயிர்பலி எதுவும் நடக்கவில்லை.
மதுரை:
மதுரையிலிருந்து, திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் பசுமலை, மூலக்கரை அருகில்,வடக்கு மற்றும் தெற்கு திசைகளை இணைக்கும் நோக்கில் உயிர் அழுத்த மின்சார கம்பிகள் சென்று கொண்டிருந்தது.இன்று அதிகாலையில் அந்த வழியாக வந்த தமிழ்நாடு அரசு மாநகர பஸ் மீது மின்சார கம்பி தாழ்வாக இருந்ததால், அதன் மீது மோதியதில் மின்சாரக் கம்பி முழுவதும் பஸ்ஸின் முடப்பு மேற்கூரை மேலே சிக்கிக் கொண்டது.
சாலையிலும் அறுந்து தொங்கியது. அதிகாலையில் பயணிகள் கூட்டம் அதிகம் இல்லாததால், தப்பிக்கும் நோக்குடன் முண்டியடித்து செல்லும் நிலை இல்லை.அவ்வாறு இருந்திருந்தால், மின்சார வயரை மிதித்து பல பயணிகள் பலியாகி இருக்க கூடும்.
இது பற்றி தகவல் அறிந்த அண்ணாநகர். வக்கீல் முத்துக்குமார் அந்த பகுதி பொதுமக்களுடன் இணைந்து உடனடியாக போக்குவரத்தை தடை செய்தார்.மின்சார வாரியத்தை தொடர்பு கொண்டது போது, இணைப்பு கிடைக்க வில்லை. இது குறித்து உடனே மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதாவிற்கு வாட்சப் மூலமும், சென்னை மின்சாரம் வாரிய குறை தீர்க்கும் மையத்திற்கும் தகவல் அளித்தார்.
அதன் பேரில் ஒன்றரை மணி நேரம் கழித்து மின்சார வாரிய ஊழியர்கள் வந்து மின் இணைப்பை துண்டித்து பஸ்ஸிற்குள் சிக்கி இருந்த மின்சாரம் வயரை துண்டித்து பஸ்சை மீட்டனர். இன்று பௌர்ணமி மற்றும் ஆவணி அவிட்டம் தினமாக இருந்ததால் திருப்பரங்குன்றத்திற்கு அதிகமான அளவில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.
சரியான நேரத்தில் போக்குவரத்தை தடை செய்யவில்லை என்றால், மின்சார வயர் கண்ணுக்கு தெரியாமல் வாகனங்களில் சிக்கி ஏராளமான உயிர்பலிகள் ஏற்பட்டிருக்கும்.
இதுபற்றி வக்கீல் முத்துக்குமார் கூறும்போது:-
தகுந்த நேரத்தில் தடுப்புகளை ஏற்படுத்தி போக்குவரத்தை தடை செய்ததால் உயிர்பலி தடுக்க பட்டது.புதிதாக சாலை போடும் போது பழைய சாலையை தோண்டி விட்டுத்தான் புதிய சாலை அமைக்க வேண்டும். ஆனால், பழைய சாலைகளுக்கு மேலேயே புதிதாக கற்களை போட்டு இரண்டு அடி உயரத்திற்கு சாலைகளை அமைத்து விடுகின்றனர். ஆனால், அந்த உயரத்திற்கு ஏற்றவாறு பழைய மின்சார இணைப்பு வயர்களை ஏற்றி கட்டுவது இல்லை. ஆகவேதான் இவ்வாறு அடிக்கடி வாகனங்களில் மின்சார வயர் சிக்கி அறுந்து விழுகிறது. ஆகவே, நெடுஞ்சாலை துறையும், மதுரை மாநகராட்சியும், மின்சார வாரியமும் தான் இத்தகைய விபத்திற்கு காரணம் என்று கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu