தேனூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கல்வியாளர் தூய்மைப் பணி

தேனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்வியாளர்களின் தூய்மைப் பணி நடைபெற்றது.
கிராம பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி , பல ஆண்டுகளாகவே செயல்படாமல் இருந்த மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் நோக்கத்துடன், கல்விபுரவலர் சாமிக்காளை, தலைமையில் தூய்மை பணி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சுழியம் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் ஆசிரியர் ஜெயக்குமார் மன்றச் செயலாளர் கார்த்திகை குமரன், காந்தி, செல்வம், சமூக ஆர்வலர் கார்த்தி, சதீஷ் ஆகியோர் பங்கேற்றனர். இனி வரும் கல்வி ஆண்டில், பள்ளி கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட கல்வி அதிகாரிகளை சந்தித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி புரவலர் சாமிக்காளை தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu