மதுரை அருகே அரசு அனுமதியின்றி செயல்பட்ட மருந்து கடைகள், ஆய்வகங்கள்

மதுரை அருகே அரசு அனுமதியின்றி செயல்பட்ட மருந்து கடைகள், ஆய்வகங்கள்
X

மருந்து கடை (கோப்பு படம்)

மதுரை அருகே அரசு அனுமதியின்றி செயல்பட்ட மருந்து கடைகள் மற்றும் ஆய்வகங்களுக்கு பூட்டு போடப்பட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தோப்பூர் பகுதிகளில் அனுமதி இன்றி செயல்பட்ட மருத்துவ மனைகள் மற்றும் மருந்து கடைகளுக்கு சுகாதாரத் துறையினர் பூட்டு போட்டனர்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உரிய அனுமதியில்லாமல் பல மருத்துவமனைகள் செயல்பட்டு வருவதாக, மதுரை மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனருக்கு புகார் வந்தது .

இதனைத் தொடர்ந்து மருத்துவ துறை அதிகாரிகள் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா தோப்பூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் திடீர் சோதனை நடத்தினார்கள்.இந்த சோதனையின்போது உரிய அனுமதியின்றி மருத்துவமனை மற்றும் லேப் செயல்பட்டு வந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும், டாக்டர்கள் இன்றி செவிலியர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததும் தெரியவந்தது.

அதேபோல், அந்தப் பகுதியில் செயல்பட்ட மற்றொரு மருத்துவமனை மற்றும் லேபில் வேறொரு டாக்டர் பெயரில் அனுமதி இன்றி செயல்பட்டு வந்ததும் அதில் ,வெளிநாட்டில் டாக்டர் படிப்பு பயின்றவர், தமிழகத்தில் முறையாக பதிவு செய்யாமல் சிகிச்சை அளித்து வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இணை இயக்குனர் மருத்துவர் செல்வராஜ் தலைமையிலான மருத்துவ குழுவினர் உரிய அனுமதியை பெற்ற பின்னர் மருத்துவமனை, மெடிக்கல்களை நடத்துமாறு கூறி அதற்கு பூட்டு போட்டு விட்டு சாவியை போலீசில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக மருத்துவ இணை இயக்குனர் மருத்துவர் செல்வராஜ் கூறுகையில், உரிய அனுமதி இன்றி செயல்படும் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களை இல்லாமல் செவிலியர்களை வைத்து மருத்துவம் பார்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!