மதுரையிலுள்ள பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்கல்

மதுரையிலுள்ள பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்கல்
X

மதுரையிலுள்ள டாக்டர் டி. திருஞானம் துவக்கப் பள்ளியில் 'நூல் வனம்' அமைப்பு சார்பாக பள்ளி நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாசித்தால் வாழ்வில் வெற்றியாளராக திகழலாம் என்றார் வட்டாரக்கல்வி அலுவலர்

மதுரையிலுள்ள டாக்டர் டி. திருஞானம் துவக்கப் பள்ளியில் 'நூல் வனம்' அமைப்பு சார்பாக பள்ளி நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்விற்கு, தெற்கு வட்டாரக் கல்வி அலுவலர் ஜெசிந்தா அன்பு மொழி தலைமை வகித்து பேசும் போது, தொடக்க கல்வியில் இருந்தே வாசிப்பை பழக்கமாக்க வேண்டும். இந்த வயதில் புத்தகங்கள் வாசிப்பது கடினமாக இருக்கும், முயற்சியுடன் படிக்க ஆரம்பித்தால், அது வேறு உலகத்திற்கு உங்களை அழைத்து செல்லும். புத்தகங்கள் தன்னம்பிக்கை , தைரியத்தை வழங்க வல்லவை. சில புத்தகங்கள் நம்மை சிரிக்க வைக்கும். சில சமூகத்தை பற்றிய சிந்தனையை உருவாக்கும். நல்லபுத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாசித்தால் , வாழ்வில் வெற்றியாளராக திகழலாம் என்றார்.

தலைமையாசிரியர் க.சரவணன் நூல்வனம் சார்பாக பள்ளி நூலகத்திற்கு புத்தகங்களை வழங்கி பேசும் போது , நூல் வனம் என்ற அமைப்பு அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி நூலகங்களுக்கு புத்தகங்ளை வழங்கி, குழந்தைகளின் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதன் நிறுவனர் என்ற வகையில் நம் பள்ளிக்கு வருடம் வருடம் புத்தகங்களை நன்கொடையாக வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். புத்தகங்கள் மாணவர்களின் கற்பனையைத் தூண்டி , படைப்பாற்றல் திறனை உருவாக்குபவை. புத்தகங்கள் சிறத்த நண்பர்கள். உங்கள் ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக மாற்ற புத்தகம் வாசிப்பதை சுவாசமாக்குங்கள் என்றார்.

இப்பள்ளி நூலகத்திற்கு நூல் வனம் சார்பாக சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் சாதனா புத்தங்களை நன்கொடையாக வழங்கினார். ஆசிரியர்கள் பாக்யலெட்சுமி, சிதராதேவி, கீதா, பிரேமலதா, சரண்யா , சுமதி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுளைச் செய்தனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!