சோழவந்தான் அருகே திமுக செயல் வீரர்கள் கூட்டம்

சோழவந்தான் அருகே    திமுக செயல் வீரர்கள்  கூட்டம்
X

சோழவந்தான் அருகே நடைபெற்ற திமுக செயல் வீரர்கள் கூட்டம்.

சோழவந்தான் அருகே தென்கரை யில் நடந்த திமுக செயல் வீரர்கள் கூட்டம் ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் சிறப்புரை யாற்றினார்

சோழவந்தான் அருகே தென்கரையில் திமுக செயல் வீரர்கள் கூட்டம் ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் சிறப்புரை ஆற்றினார்.

மதுரை வடக்கு மாவட்டம், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் சோழவந்தான் அருகே தென்கரையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, அவைத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

ஊத்துக்குளி ராஜாராமன், திருவேடகம் பெரிய கருப்பன், நீலமேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்கரை ஊராட்சி செயலாளர் சோழராஜா வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தில், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இதில், செப்டம்பர் 20ஆம் தேதி பொற்கிழி வழங்குதல் நிகழ்ச்சி, டிசம்பர் 17ல் இளைஞர் அணி மாநாட்டில் ஏராளமானோர் பங்கேற்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சந்தான லட்சுமி, மாவட்டஇளைஞர் அணி துணை அமைப்பாளர் வெற்றிச்செல்வன், முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா, இளைஞர் அணி பால் கண்ணன், கார்த்தி, மகளிர் அணி இந்திரா காந்தி, ஆதி மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!