சோழவந்தான் அருகே கொட்டும் மழையில் திமுக பொதுக் கூட்டம்
சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் நடந்த திமுக பொதுக் கூட்டம்.
சோழவந்தான் அருகே முள்ளி பள்ளத்தில் கொட்டும் மழையில் திமுகவின்.ஈராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது
மதுரை வடக்கு மாவட்டம், சோழவந்தான் தொகுதி வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகம் சார்பாக, முள்ளி பள்ளம் ஊராட்சியில், திமுகவின் ஈராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். வாடிப்பட்டி தெற்கு ஒன்றியச் செயலாளர் பசும்பொன்மாறன், வடக்கு ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன்,
வாடிப்பட்டி பேரூர் செயலாளர் பால்பாண்டியன், சோழவந்தான் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் வழக்கறிஞர் முருகன், சோழவந்தான் பேரூராட்சித் தலைவர் எஸ்.எஸ்.கே. ஜெயராமன்,மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சந்தான லட்சுமி ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார்கள். தலைமை கழக பேச்சாளர் வெங்கடேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில், நிர்வாகிகள் அவைத் தலைவர் எம். ஆர். எம். பாலசுப்பிரமணியன்,சி பி ஆர் சரவணன், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் ,சோழவந்தான் பேரூராட்சி துணைத் தலைவர் லதா கண்ணன், முன்னாள் பேரூர் செயலாளர் முனியாண்டி, பேரூர் துணைச் செயலாளர் ஸ்டாலின், குத்தாலம் செந்தில்,மாவட்ட பிரதிநிதி பேட்டை பெரியசாமி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அயுப் கான், ஒன்றிய கவுன்சிலர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், ஒன்றிய துணைச் செயலாளர் மேலக்கால் சாந்திராஜா, இளைஞர் அணி வெற்றிச்செல்வன், தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் பாலசுப்பிரமணியன்,
ஊத்துக்குளி ராஜா, திருவேடகம் ராஜா என்ற பெரிய கருப்பன், மாணவரணி எஸ் ஆர் சரவணன், மேலக்கால் பன்னீர்செல்வம் தென்கரை சோழராஜா, ஐயப்பன் நாயக்கன்பட்டி மணிவேல், குருவித்துறை அலெக்ஸ், சோழவந்தான் நிர்வாகிகள் முட்டைக்கடை காளி, மில்லர், பசும்பொன் நகர் மணி, பாண்டி, சங்கங்கோட்டை சந்திரன் மற்றும் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் முள்ளிப்பள்ளம் கிளைக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் மகளிர் அணியினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, திமுகவின் பிரசார பாடல்கள் அடங்கிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, திடீரென கனமழை பெய்தது . கனமழைக்கிடையே தொடர்ந்து திமுக ஈராண்டுசாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. முடிவில், முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவரும் ஊராட்சி செயலாளருமான கேபிள் ராஜா நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu