மதுரை அரசு அலுவலக வளாகத்தில் திமுக கொடி கம்பம்: பாஜகவினர் போராட்டம்
பைல் படம்
மதுரையில் அரசு அலுவலக வளாகத்தில் திமுக கொடி.கம்பம் அமைத்தற்கு பாஜகவினர் எதிர்ப்புத் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது
மதுரை ஆவின் எதிரே நகர் புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்திற்குள் திடீரென திமுக வினர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கொடி கம்பம் வைத்து விதி முறைகளை மீறி பீடம் கட்டினர். இது குறித்து தகவல் அறிந்த பாஜகவினர் மற்றும் பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் முத்துக்குமார் தலைமையில் நிர்வாகிகள் மணவாளன், பாஸ்கரன், சீதா உள்ளிட்டோர் அப்பகுதியில் திரண்டனர்.
இந்த அலுவலகத்தில் எவ்வித விளம்பரங்களும் செய்ய கூடாதென காவல் துறை சார்பில் அறிவிக்க பட்டு சுவர் விளம்பரம் செய்ய பட்டுள்ளது. அதன் அருகிலேயே காவல் துறை மற்றும் அரசு உத்தரவை மீறி திமுக கொடி கம்பம் வைத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மீறி வைத்தால் அதை பாஜக அகற்றும் எனவும் தெரிவித்தனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.
இதனால் இரண்டு தரப்பினருக்குமிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. அண்ணாநகர் காவல் ஆய்வாளர் சாதுரமேஷ் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இரு தரப்பினரிடமும் போலீசார் மற்றும் நகர் புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் மூன்று மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தினர். கடைசியில் திமுக வினர் கொடி கம்பம் மற்றும் பீடத்தில் உள்ள கட்சிக் கொடியை எடுத்து விடுவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பாஜக வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு பீடத்தில் இருந்த கொடி கம்பம் அகற்ற பட்டு அதில் உள்ள கருப்பு சிவப்பு பெயிண்ட் முழுவதும் அழிக்கப்பட்டது.இந்த சம்பவத்தால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
பெரியார் பேருந்து நிலையத்தில் முதியவர் பயணியிடம் பணம் பறிப்பு: இருவர் கைது
மதுரை சிக்கந்தர் சாவடியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி( 67). இவர் பெரியார் பேருந்து நிலையம் முதலாவது பிளாட்பாரத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது இரண்டு பேர் அவரிடமிருந்து ரூ 2500 ஐ திருட முயன்றனர். அப்போது அவர் கூச்சல் போடவே அக்கம் பக்கத்தில் நின்றிருந்த பயணிகள் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் இருவரையும் திடீர் நகர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் விசாரித்த போது அவர்கள் அலங்காநல்லூர் பெரிய ஊர் சேரியை சேர்ந்த செல்வம்( 52,). அலங்காநல்லூர் ஆதனூரைச் சேர்ந்த பாண்டித்துரை(42 ) என்று தெரிய வந்தது .அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்
தல்லாகுளத்தில் சினிமா காட்சிபோல பைக்கில் ஸ்டண்ட் செய்த சிறுவன் உட்பட 9 பேர் கைது
மதுரைதல்லாகுளம் சொக்கிகுளம் வல்லபாய் மெயின் ரோடு பகுதியில் சென்ற சிறுவர் உட்பட ஒன்பது பேர் சினிமா காட்சிபோல சண்டையிட்டு கொண்டிருந்தனர். இந்தச்செயல் அந்தப்பகுதியில் பொதுமக்களுக்கு பெரிய இடையூறாக இருந்தது. இது குறித்து தல்லாகுளம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.தகவல் அறிந்த தல்லாகுளம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஆதிகுந்த கண்ணன் சம்பவ இடத்திற்கு போலீசாருடன் சென்றார். அவர் அங்கு பைக்கில் ஸ்டண்ட் செய்த சிறுவன் உட்பட ஒன்பது பேரை சுற்றி வளைத்து பிடித்தார்.
பிடிபட்டவர்களிடம் அவர் விசாரணை செய்தபோது அவர்கள் காமராஜர் புரம் சாகுல் அமீது மகன் முகமது ஷேக்(19,) சோழவந்தான் ஜெயராம் மகன் விஷ்ணு(19,), பழங்காநத்தம் பிரபு மகன் ஸ்ரீ ஹரிஷ்(18,), ஒத்தக்கடை ராமர் மகன் சந்தோஷ்(18 ),திண்டுக்கல் மணிகண்டன் மகன் மது மாதவன்(18,), சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் முனீஸ்வரன் மகன் சிவானந்தம்(19,), சோழவந்தான் வேதரத்தினம்(19,), ராஜா முகமது மகன் முகமது தவ்பிக்(19,) மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 9 பேரை என்று தெரியவந்தது அவர்கள் ஒன்பது பேரையும் கைது செய்தனர்.
வண்டியூரில் காலி இடத்தில் பெண் சிசு வீச்சு: போலீஸ் விசாரணை
மதுரை வண்டியூர் சௌராஷ்டிரபுரம் முதல் தெருவில் காலி இடம் ஒன்றில் இறந்த நிலையில் பெண்சிசு ஒன்று வீசப்பட்டு கிடந்தது. இந்த தகவல் மதுரை கிழக்கு சக்கிமங்கலம் விஏஓ தங்கபாண்டிக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் சம்பவத்திற்கு விரைந்து சென்று வீசப்பட்ட பெண் சிசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து வீசப்பட்ட குழந்தை யாருக்கு சொந்தமானது. யார் அந்த குழந்தையை வீசினார்கள். இறந்த நிலையில் வீசினார்களா அல்லது கொலை செய்து வீசினார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெப்பக்குளத்தில் வாலிபர் மீது தாக்குதல்: நடத்திய இருவர் கைது
மதுரை கீழ சந்தப்பேட்டை கொண்டித்தொழு தெருவை சேர்ந்தவர் மகபூப் பாஷா மகன் முகமது ஆதீஷ்(30.). இவர் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இரண்டு வாலிபர்கள் அவரை ஆபாசமாக பேசி சரமாரியாக தாக்கினர்.இந்த தாக்குதல் குறித்து முகமதுஆதீஷ் தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய காமராஜர் சாலை தூமாட்டி ரங்கசாமி ஐயர் சந்தைச்சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் செல்வகுமார்( 24,), முனிச்சாலை சீனிவாச பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ராமு மகன் கோபி( 23 )ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu