திமுகவில் தேர்தல் அறிக்கை வெற்று அறிவிப்பாகத்தான் உள்ளது: முன்னாள் அமைச்சர்

திமுகவில் தேர்தல் அறிக்கை வெற்று அறிவிப்பாகத்தான் உள்ளது: முன்னாள் அமைச்சர்
X

 மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.பி. உதயகுமார் ஊத்துப்பட்டி, புளியங்குளம், செக்கானூரணி, தேங்கல்பட்டி, கொக்குளம், பாறைப்பட்டி, கிண்ணிமங்கலம், சிக்கம்பட்டி, மீனாட்சிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார்.

திமுக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டினார்

திமுகவினரால் நிறைவேற்றப்பட்டதாக கூறிவரும் 202தேர்தல் அறிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றும் வெறும் அறிவிப்பாகத்தான் உள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பிரசாரம் செய்தார்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதி 16வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் தமிழழகன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.பி. உதயகுமார் ஊத்துப்பட்டி, புளியங்குளம், செக்கானூரணி, தேங்கல்பட்டி, கொக்குளம், பாறைப்பட்டி, கிண்ணிமங்கலம், சிக்கம்பட்டி, மீனாட்சிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார்.

ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: இந்த தொகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக எண்ணற்ற திட்டங்களான சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை கொடுத்துள்ளேன். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 505 தேர்தல் வாக்குறுதி கொடுத்தனர். அதில் குறிப்பாக பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், கேஸ் மானியம் 100 ரூபாய் வழங்கப்படும் என்றும் கூறினார்கள்‌.

இதுகுறித்து, சட்டமன்றத்தில் நாங்கள் ஸ்டாலின் அண்ணாச்சி நீங்கள் சொன்னது என்ன ஆச்சு என்று கேள்வி கேட்டோம். ஒன்றும் சொல்லவில்லை. மாறாக தற்போது 202 தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றி உள்ளதாக கூறிவருகின்றனர்.அது நிறைவேற்றப்படவில்லை. வெறும் அறிவிப்புதான் வெளியிட்டுள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று தேர்தலின்போது கூறினார்கள். ஆனால், தற்போது சட்டமன்றத்தில் எடப்பாடியார் நிறைவேற்றிய சட்ட மசோதாவை தான் திமுகவினர் புதுப்பித்துள்ளனர்.

அடிக்கடி தற்போது மின்வெட்டு ஏற்படுகிறது. ஜெ. ஆட்சிக்காலத்தில் மின்வெட்டு என்பது இல்லை. அது மட்டுமல்லாது கரண்ட் -ஐ தொட்டால் தான் ஷாக் அடிக்கும். ஆனால், இன்றைக்கு மின்சார பில்லை பார்த்தாலே நமக்கு ஷாக் அடிக்கிறது. முதியோர் உதவி தொகையை 500 ரூபாயிலிருந்து 1,000 ஆக தந்தது ஜெ.வின் அரசாகும். நடைபெற்ற திமுக தேர்தல் அறிக்கையில், முதியோர் உதவி தொகையை1500 ரூபாயாக உயர்த்தப்படும் என்று திமுக கூறினார்கள். ஆனால், கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. பெண்களுக்கு மானிய விலையில் இரண்டு சக்கர வாகனங்களை அதிமுக அரசால் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இத்திட்டத்தை திமுக அரசு ரத்து செய்துள்ளது. காரணம் கேட்டால் மக்களிடத்தில் வரவேற்பு இல்லை என்று பச்சைப் பொய் கூறுகிறார்கள்.

கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு கீழே நகை வைத்திருந்தால் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறினார்கள். அதை நம்பி ஏழை எளிய மக்கள் அடமானம் வைத்திருந்தனர். தற்போது அதற்கு பல்வேறு விதிகளை புகுத்தியதால் ஏழை எளிய மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மக்களுக்காக நாங்கள் உழைத்து வருகிறோம் உங்கள் பிரச்னையை அனைத்தும் சட்டமன்றத்தில் குறிப்பிடுகிறோம். உள்ளாட்சியில் உங்கள் பிரச்னைகளை குரல் எழுப்பி அதன் மூலம் தீர்வு காண வரும் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

Tags

Next Story
கொல்லிமலையில் மலைவாழ் மக்கள் தார் சாலை அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!