வாடிப்பட்டியில், தேமுதிகவினர் மவுன அஞ்சலி!

வாடிப்பட்டியில், தேமுதிகவினர் மவுன அஞ்சலி!
X

வாடிப்பட்டியில்  விஜயகாந்துக்கு, அஞ்சலி செலுத்திய தேமுதிகவினர்.

வாடிப்பட்டியில், நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு தேமுதிகவினர் மவுன அஞ்சலி செலுத்தினர்.

வாடிப்பட்டியில், தேமுதிகவினர் மவுன ஊர்வலம்

சினிமா, அரசியல் என இரண்டின் வரலாற்றிலும் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் விஜயகாந்த். தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (டிச.28) உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல்களையும் அஞ்சலியையும் செலுத்தி வருகின்றனர்.

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைவுவையொட்டி வாடிப்பட்டி பேரூர் தேமுதிக கழகம் சார்பாக, மௌன அஞ்சலி மற்றும் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு, வாடிப்பட்டி பேரூர் கழகம் சார்பாக மௌன அஞ்சலி மற்றும் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. வாடிப்பட்டி பேரூர் கழக செயலாளர் பாலாஜி தலைமை வகித்தார். சோமநாதன் தமிழ் முருகன் ,பி .பி. முருகன், ஏ .கே. மூர்த்தி ,அறிமலை கார்த்தி மற்றும் முன்னாள் பேரூராட்சி செயலாளர்கள் மாரியப்பன், ஜெயராஜ் ,முத்துப்பாண்டி, வக்கீல் முருகன் ,சங்கு பிள்ளை, மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் தங்கராஜ் மாவட்ட அவைத்

தலைவர் கர்ணன்,ஒன்றிய செயலாளர்கள் முத்துப்பாண்டி , தெய்வேந்திரன், ஒன்றிய நிர்வாகிகள் நாகராஜ் பெருமாள் சத்திய லிங்கேஸ்வரன், மகளிர் அணி ஒன்றிய செயலாளர் நிர்மலா தேவி, மாவட்ட மாணவரணி செயலாளர் அருண் மற்றும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story
ஆசிரியர்களுக்கு உதவியாக மொபைல் செயலி: வேலை சுமையை குறைக்க புதிய முயற்சி..!