வாடிப்பட்டியில்தேமுதிக சார்பில் கொடியேற்று விழா

வாடிப்பட்டியில்தேமுதிக சார்பில்   கொடியேற்று விழா
X

வாடிப்பட்டியில் தேமுதிக   சார்பில், கொடியேற்று விழா  நடந்தது.

Dmdk Party Flag Hoisting Function மதுரை வடக்கு மாவட்டம் ,வாடிப்பட்டி பேரூர் தே.மு.தி.க சார்பாக கட்சி கொடியேற்று விழா போடிநாயக் கன்பட்டியில் நடந்தது

Dmdk Party Flag Hoisting Function

இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக அத்தனை மாநில கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டு மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தினைப் பொறுத்தவரை திமுக அதிமுக என இரு பெரிய கட்சிகளின் தலைமையில் எப்போதும் கூட்டணி அமைவது வழக்கம். இதில்திமுகவில் ஏற்கனவே கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளே தொடர்கிறது. பிரச்னையில்லை. இக்கட்சியினைப் பொறுத்தவரை கூட்டணி பேச்சுவார்த்தை அதாவது எத்தனை தொகுதி தேவை என்பதை அனைத்து கட்சிகளுக்கான முதற்கட்ட கூட்டத்தினை நடத்தி முடித்துவிட்டது. இனி இதற்கான பதிலைத்தான் திமுக சொல்லவேண்டிய நிலையில் உள்ளது. அதிமுகவைப் பொறுத்தவரை பாஜவுடன் கூட்டணி இல்லை என்று சொன்னாலும் ஒரு சிலர் அதிமுகவோ அல்லது பாஜவோ தனித்து களமிறங்கினால் வெற்றி வாய்ப்பை பெறுவது கடினம் என சொல்வதால் கடைசி நேரத்தில் ஒன்று சேர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்துவிட்டதால் அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ளார். அவருடைய வழிகாட்டுதல் படி கட்சி செயல்பாடுகள் நடந்து வருகின்றன. எனவே கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் அனைத்து ஊர்களிலும் முதற்கட்டமாக கட்சி கொடிகள் ஏற்றும் பணியானது துரித கதியில் நடந்து வருகிறது. அந்த வகையில்,

மதுரை வடக்கு மாவட்டம் ,வாடிப்பட்டி பேரூர் தே.மு.தி.க சார்பாக கட்சி கொடியேற்று விழா போடிநாயக் கன்பட்டியில்

நடந்தது. இந்த விழாவையொட்டி, விஜயகாந்த் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து, தே.மு.தி.க . கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. இந்த விழாவில், பேரூர் செயலாளர் பாலாஜி தலைமை தாங்கி, விஜயகாந்த் உருவப்படத்திற்கு மலர்துாவி கொடியேற்றினார்.

அவைத்தலைவர் கோபால் முன்னிலை வகித்தார்.பொருளாளர் சோமநாதன் வரவேற்றார். முன்னாள் பேரூர் செயலாளர்கள் மாரியப்பன், ஜெயராஜ் இனிப்பு வழங்கினர். இதில், துணைச் செயலாளர் அரிமலை, ஏ.கே.மூர்த்தி, பேரூர் பிரதிநிதிகள் சங்கு பிள்ளை , கார்த்திக்,தாஸ், உதயா பாலு ,கண்ணன் ,முத்து , மணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.முடிவில் ,மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் சத்திய லிங்கேஸ்வரன் நன்றி தெரிவித்தார். .

Tags

Next Story
உங்களுக்கும் மனஅழுத்தம் இருக்கலாம்...! கவனமா இருங்க..!