மதுரை மாநகராட்சி சார்பில் வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர், அதிகாரிகள் ஆய்வு
மதுரை மாநகராட்சி வளர்ச்சித் திட்டப் பணிகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ,நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா ஆகியோர் ஆய்வு செய்தனர்
மதுரை மாநகராட்சி வளர்ச்சித் திட்டப் பணிகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ,நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
மதுரை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி , மேயர் இந்திராணி பொன்வசந்த் , நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா, மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங், ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
மதுரை மாநகராட்சி பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணியின் கீழ் சாலைகள் அமைத்தல், மழைநீர் வடிகால்கள், பாதாளச்சாக்கடை பணிகள், தெருவிளக்குகள் பராமரித்தல், தூய்மை பணிகள், கால்வாய்கள் தூர்வாருதல், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் பாதாளச்சாக்கடைக்களில் அடைப்பு ஏற்பட்டு மேன்ஹோல் வழியாக கழிவுநீர் வெளியேறுவதை தவிர்க்கும் பொருட்டு தற்போது ,நவீன கழிவுநீர் உறிஞ்சும் வாகனம் வாடகை அடிப்படையில் வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட உள்ளது.
இவ்வாகனம் மூலம் பாதாள சாக்கடை மேன்ஹோலில் உள்ள மணல்கள், கழிவுகள் உள்ளிட்டவற்றை எளிதாக அகற்ற முடியும். இவ்வாகனம் ஒரு நாள் (8 மணி நேரம்) பயன்பாட்டிற்கு ரூ.81,500 வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு நாளைக்கு சுமார் 15 முதல் 20 மேன்ஹோலில் உள்ள மண்கள் முழுவதும் அகற்றமுடியும் மற்றும் சுமார் 400 முதல் 500 மீட்டர் நீளமுள்ள மேன்ஹோல் பைப்புகளில் உள்ள அடைப்புக்களையும் சரி செய்ய முடியும்.
தற்போது 15 நாட்களுக்கு இவ்வாகனம் மூலம் மதுரை மாநகராட்சி பகுதிகளில் பாதாளச்சாக்கடைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாகனத்தின் மாதிரி பரிசோதனை கே.கே.நகர் மெயின் சாலையில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்புகள் எடுக்கும் பணியினை, மேயர், நகராட்சி நிர்வாக இயக்குனர், ஆணையாளர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கெண்டனர்.
தொடர்ந்து, மண்டலம்-1 சம்பக்குளம் மெயின் ரோடு பகுதியில் ரூ.97 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சாலைகள் அமைப்பதற்கு முன்பு பழைய பழுதான சாலைகளை பெயர்த்து எடுத்து புதிய தார்சசாலை அமைப்பதற்கு சீரமைக்கும் பணியினையும், அம்ரூத் திட்டத்தின் கீழ் முல்லை பெரியார் அணையில் இருந்து மதுரை மாநகராட்சியில் 100 வார்டு பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வழங்குவதற்கு குழாய்கள் மற்றும் மேல்நிலைத் நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்கீழ் வார்டு எண்.6 உச்சபரம்புமேடு இ.பி. காலனி மெயின் ரோடு பகுதியில்; 18 லட்சம் லிட்டர் கொள்ளளவில் கட்டப்பட்டு வரும் குடிநீர் மேல்நிலைத் நீர்த்தேக்க தொட்டி.
வார்டு எண்.6 இ.பி. காலனி பகுதியில் ஒவ்வொரு வீடுகளுக்கும் குடிநீர் வழங்குவதற்காக வீட்டு குடிநீர் இணைப்பிற்காக குழாய்கள் பதிக்கப்பட்டு வரும் பணியினையும், வார்டு எண்.7 எம்.எம்.நகர் பகுதியில் ரூ.99 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலையினையும், வார்டு எண்.7 திருப்பாலை பகுதி ஹரி 1-வது மற்றும் 2-வது தெருவில் சாலைகளை வெட் மிக்ஸ் கலவை கொண்டு சீரமைக்கும் பணியினையும் மற்றும் உச்சபரம்புமேடு பகுதிகளில் நலவாழ்வு மையம் கட்டுமான பணிகள் என பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து ,அறிஞர் அண்ணா மாளிகை ஸ்மார்ட் சிட்டி கருத்தரங்கு கூடத்தில் மாநகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி விரிவாக்கப்பட்ட பகுதிகளுக்கு பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் குறித்தும், மாநகராட்சியின் 100 வார்டு பகுதிகளுக்கு சீரான குடிநீர் வழங்குதல், சாலைகள் அமைத்தல், புதிய தெருவிளக்குகள் அமைத்தல் மற்றும் பராமரித்தல், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் திடக்கழிவுகளை முறையாக அகற்றுதல்; உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து மாநகராட்சியின் பொறியாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வுகளில், துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர்கள் வாசுகி, சரவண புவனேஸ்வரி துணை ஆணையாளர் முஜிபூர் ரகுமான், நகரப்பொறியாளர் அரசு, கண்காணிப்பு பொறியாளர் அன்பழகன், செயற் பொறியாளர்கள் பாக்கியலெட்சுமி, சாய்ராஜ், ரவிச்சந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி ஆணையாளர்கள், காளிமுத்தன், மனோகரன், செயற்பொறியாளர்கள், உதவி செயற் பொறியாளர்கள், உதவி ஃ இளநிலை பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu