நீர் வழி பாதைகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நீர் வழி பாதைகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
X

சேதப்படுத்தப்பட்ட நீர்வழிப்பாதை.

நீர் வழி பாதைகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சோழவந்தான் அருகே விவசாய நிலங்களுக்கு செல்லும் நீர்வழி பாதையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட கீழ மட்டையான் பகுதியில் விவசாய நிலங்களுக்கு செல்லும் நீர்வழிப் பாதையை சேதப்படுத்திய மர்ம நபர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர் . கீழ மட்டையானில் உள்ள சுமார் 100 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாய நிலங்களுக்கு மேல மட்டையான் அருகே உள்ள கண்மாயிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது .

இந்த தண்ணீர் திறந்து விடும் பகுதியில், சிறிய தடுப்பணை கட்டி தேவைப்படும் அளவுக்கு தண்ணீரை தேக்கி விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் வரக்கூடிய தண்ணீரையும் நிலையூர் கால்வாயில் இருந்து வரும் தண்ணீரையும் கீழ மட்டையானுக்கு சொந்தமான கண்மாயில் தேக்கி வைத்து விவசாயத்திற்கு தேவைப்படும் போது, சிறிய தடுப்பணை வழியாக பயன்படுத்தி வந்தனர் .

இந்த நிலையில், இந்த தடுப்பணையை மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தி உள்ளதாக இந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர். ஆகையால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுப்பணையை நேரில் பார்வையிட்டு சேதப்படுத்திய நபர்களை கண்டுபிடித்து காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொது சொத்தை சேதப்படுத்தும் நபர்கள் மீது, அரசு கடும் நடவடிக்கை எடுத்தால் தான், இது போல செயல்களை தடுத்து நிறுத்தலாம் என, கிராம மக்கள் அரசிடம் கோரிக்கை வைத்து உள்ளனர்.

Tags

Next Story
ai in future education