வடகிழக்கு பருவ மழை பணிகளில் தொய்வு: முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

வடகிழக்கு பருவ மழை பணிகளில் தொய்வு:  முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு
X

மதுரையிஸ் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

North East Monsoon in Tamilnadu -90 % மழைநீர் வடிகால் பணிகள் முடிந்து விட்டதாக ரெடிமேட் பதிலை அரசு கூறுகிறது. ஆனால், 40 % பணிகள் கூட நடைபெறவில்லை

North East Monsoon in Tamilnadu -90 சதவீத மழைநீர் வடிகால் பணிகள் முடிந்து விட்டதாக ரெடிமேட் பதிலை அரசு கூறுகிறது. ஆனால், 40 சதவீத பணிகள் கூட நடைபெறவில்லை என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஆதாரத்துடன் குற்றம் சாட்டினார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும்.ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்துக்கு இயல்பாக கிடைக்கக்கூடிய 448 மில்லி மீட்டர் மழைநீரில், ஏறத்தாழ 50 சதவீதம் குடிநீருக்காகவும், விவசாயத்திற்காகவும் கிடைக்கக்கூடியமழைப்பொழிவு ஆகும்.இந்தாண்டு இயல்பை விட 38% முதல் 75% வரை கூடுதல் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் நமக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

இந்த நிலையில், கடந்த 29ம் தேதி வடகிழக்கு பருவமழைத்து தொடங்கி தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தற்போது , தமிழ்நாட்டில் 43 நீர்த்தேக்கங்களின் 75 சதவீதம் முதல் 100 சகவீதம் வரைநீர் நிரம்பி உள்ளது. 17 நீர்தேக்கங்களில் 50 சகவீதம் முதல் 75 சகவீதம் வரை மழை நீரால் நீர்நிலை நிறைந்திருப்பதாக செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

இலங்கை முதல் வட தமிழகம் வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கடலோர பகுதிகளில் இருந்து மேற்கு மற்றும் வடகிழக்கு திசையிலே தரை பகுதிக்குள் நேற்று முன்தினம் தாழ்வு மண்டலம் புயல் சின்னமாக மாறி நகர துவங்கி உள்ளது. இதனால் தீவிரமடைந்து பருவமழை தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், அதிகபட்சமாக 20 சென்டிமீட்டர் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சென்னை மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்பதால் ,மக்கள் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

சென்னை கேகே நகர், அசோக் நகர், பூந்தமல்லி நெடுஞ்சாலை கோயம்பேடு, காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் சென்னை வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.இந்த மழையால், சென்னை வியாசர்பாடி சேர்ந்த தேவேந்திரன் மின் கசிவு ஏற்பட்டதன் காரணமாக பலியாகி உள்ளார். புளியந்தோப்பில் ஒரு பெண் மழையினால் சுவர் இடிந்து விழுந்து கதறி அழும்காட்சியில் ஒரு கண்ணீரை வர வழைத்துள்ளது. வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள தமிழகம் தயாராக இருக்கிறதா ? ஒரு மழைக்கே தமிழகம் தத்தளிக்கிறது என்கிற நிலையை நாம் பார்க்கிறோம் சென்னை வடிநீர் கால்வாய் திட்டம் அரை குறையாக செய்துள்ளார்கள். ஒரு மழைக்கே அது சாட்சி சொல்லி வருகிறது.

முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டு 70 சதவீத பணிகள் முடிந்து விட்டன என்று கூறுகிறார் .அதிகாரிகளுக்கு எவ்வளவு பணி முடிந்து இருக்கிறது என்ற கள நிலவரம் சரியாக தெரியவில்லை. அதிகாரிகள் 90% பணிகள் முடிந்து விட்டதாக ரெடிமேடு பதில்களை கூறுகிறார்களே தவிர, உண்மையான களநிலவரத்தை அதிகாரிகள் சொல்வதே இல்லை. சென்னையில் வடிகால் பணிகள் 40 சதவீத பணிகள் கூட முடியவில்லை என்பது தான் இன்றைய உண்மையான நிலை.

கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறிப்பாக, சென்னையில் ஒரு லட்சம் தெருகள் உள்ளது. கடந்த எடப்பாடியார் ஆட்சிக்காலத்தில் உலக வங்கி மற்றும் தமிழக அரசு நிதி உதவியுடன் 2,850 கோடி மதிப்பில் சென்னையில் மழை நீர் வடிகால் செயல்படுத்தப்பட்டன. இதனால், சென்னையில் மழைநீர் தேங்கும் இடங்கள் 3600 இருந்தது அதனை எடப்பாடியார் எடுத்த நடவடிக்கையால் 47 இடங்களாக குறைக்கப்பட்டது. குறிப்பாக ,கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் மாநகராட்சிக்கு உதவிட 23,000 பேர் நியமிக்கப்பட்டனர்

வர்தா புயல், ஒக்கி புயல், கஜா புயல், நிவர் புயல் போன்றவற்றில் அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டது. இதனால், ஒரு உயிரிழப்பு கூட இல்லாமல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, இது போன்ற பேரிடர் காலங்களில் வெள்ள தணிப்பு நடவடிக்கைகளை அப்போதிருந்த முதலமைச்ச பழனிசாமி மேற்கொள்வார்.

அதிமுக ஆட்சி காலத்தில் , தமிழகத்தில் 4,133 பகுதிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகும் பகுதி என, கண்டறியப்பட்டது, இதில் ,322 இடங்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகும், 797 இடங்கள் அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள், 1,906 இடங்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள், 1,919 இடங்கள் குறைவான பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் என்று முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக, கடலோரங்களில் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் உட்பட 4,713 தங்கும் மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. மேலும் 662 பல் துறை மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டன. பேரிடர் காலங்களில் உடனடியாக செயலாற்றிட 43,409 முதல் நிலை மீட்பாளர்கள் ஆயத்த தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில், 14,232 பேர் பெண்கள் ஆவார்கள். கால்நடைகளை பாதுகாக்க 8,871 முதல் நிலை மீட்பளார்கள் இருந்தார்கள்.

அதேபோல், மரங்களை அகற்றுவதற்கும் 9,909 முதல் நிலை மீட்பாளர்கள் ஆயுத்த பணியில் இருந்தனர். தேசிய மீட்பு படை மற்றும் மாநில மீட்பு படையில் பயிற்சி பெற்ற 5,505 காவலர்கள் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டனர். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் கீழ் 4,699 தீயணைப்பு வீரர்களும், 9,859 பாதுகாக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. 3,094 கல்வி நிறுவனங்கள், 2,561 தொழிற்சாலையில் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை விழிப்புணர்வு உருவாக்கப்பட்டது, ஆனால், தற்போது இது போன்ற விழிப்புணர்வு நடவடிக்கை தமிழக அரசு எடுக்கவில்லை.

மழை வடிகாலில் 52 கிளை வாய்க்கலுடன் சேர்க்கப்பட்டு அதை 30 பிரதான கால்வாயுடன் இணைக்கப்பட்டுள்ளது. அந்த பிரதான கால்வாய்கள் ஆறோடு சேர்க்கப்படுகிறது. இதுதான் அந்த மழை நீர் வடிகால் திட்டம். இது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு கால்வாயை ஆக்கிரமிப்பை அகற்றுவது தூர் வாருவது தொடர்ந்து கவனிப்பது இந்த பணிகள் தான் இந்த மழை காலத்தில் மிக முக்கிய பணி. இதை சரியாக கண்காணிக்கவில்லை.

அதனால், இன்று ஒரு சிறிய மழைக்கு சென்னை தத்தளிக்கிறது. அங்குமிங்கும் அமைச்சர்கள் ஓடிக் கொண்டிருக்கிறார் கள். ஆனால், எந்த வேலையும் நடைபெறவதாக தெரியவில்லை.இந்த பிரதான கால்வாய் தொடர் கண்காணிப்பு, இணைப்பு மற்றும் கண்காணிக்க வேண்டிய கால்வாய்களின் ஆக்கிரமிப்புகள் இவைகள் எல்லாம் முழுமையாக கண்காணிக்கப்படவில்லை என்பதுதான் ஒரு குற்றச்சாட்டாக இருக்கிறது.

தற்போது, சிங்கார சென்னை திட்டத்தில் கட்டமைப்பு நிதி, வெள்ளத் தடுப்பு நிதி உள்ளிட்ட பல்வேறு நிதியின் புதிய மழைநீர் வடிகால் கட்டமைப்பு பணிகள் வடிகால் தூர் வாறும் பணிகள் நடைபெறுவதாக அரசு அறிவித்திருக்கிறது.இந்த ஆண்டு 1058 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் மேற்கொள்வதாக அறிவிப்புகள் வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்த பணிகளை, முன்கூட்டியே திட்டமிட்டு பணிகள் செய்திருந்தால், சென்னை அல்லல் பட வேண்டிய அவசியம் இருக்காது என்பது தான் பெரும்பான்மையான மக்களினுடைய கருத்து..அக்டோபர் நவம்பர் டிசம்பர் ஜனவரி ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கக்கூடிய மழை நீர் தான் நமக்கு முக்கியம்.முதல்வர் ஆய்வு செய்யும் பகுதிக்கு அருகே அவர் ஆய்வு செய்யக்கூடிய பக்கத்திலேயே நாலாவது பிரதான கால்வாய் சேரும் சகதியுமாக இருக்கிறது. அங்கு எந்த பணிகளும் நடைபெறவில்லை. இதுதான் உண்மையான கள நிலவரம்.

மேலும் ,வடிகால் பணியிலே ஒருங்கிணைப்பது, அனைத்து துறைகளுக்கு ஒருங்கிணைப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. பெரும்பாலான கால்வாய்களில் கான்கிரிட் கம்பிகள், ஆறு அடி உயரத்துக்கு முழுவதுமாக வெளியே நீண்ட படி பொது மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கிற காட்சிகளையும் காண முடிந்தது.

சிறிது நேரம் மழை பெய்தால் கூட ,சென்னையில் மழை நீர் சாலையை மூழ்கடித்து.செல்கிறது மக்கள் அவதிப்படக்கூடிய சூழ்நிலையை நாம் பார்க்கிறோம்.தடுப்பு பேரிடர் கூட இல்லாததால் ஒரு செய்தியாளர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.உயிரை காவு வாங்குற காத்திருக்கிற நிலை. தினமும் உயிரை கையில் பிடித்து கொண்டு சாலையை கடந்து செல்லக்கூடிய நிலை இருக்கிறது. சில பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகள் அவசர கதியில் முடிக்கப்பட்டு சாலையில் ஒரு மண்ணை கொட்டி அந்த பணி செய்துள்ளார்கள்.

வெள்ள பாதிப்புகளை தடுப்பதற்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கடந்த கால ஆட்சி காலத்தில் பல்வேறு ஆலோசனை கொடுத்த பரிந்துரைகள் அடிப்படையில் எடப்பாடியார் செயல்படுத்தினார்கள்.திருப்புகழ் ஐஏஎஸ் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த கமிட்டியின் உடைய பரிந்துரை முடிவுகள் என்ன என்பதை இதுவரை அரசு வெளியிடவில்லை. பல்வேறு குழப்பங்களில் பெரும்பாலான இடங்களில் பணிகள் செய்யாத காரணத்தினால் சென்னையில் பாதுகாப்பற்ற நிலையை தான் நம் காண முடித்தது.பிரதான கால்வாய் எந்த கால்வாயோடு இணைக்கிறது என்பது யாருக்கும் தெரியாமல் உள்ளது.

கடந்த ஆண்டு சென்னையில் பெய்த பருவமலையின் காரணமாக சென்னை மக்கள் பாதிக்கப்பட்டது. அரசு சரியான நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தான். பருவமலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க இந்த அரசு தவறி விட்டது என்பது தான் நேற்று சென்னை நிலவரம் குறித்து ஊடகங்களில் வெளியான காட்சிகளிலே தெரிகிறது. ஆகவே இந்த பேரிடர் காலங்களில் முன்னாள் முதல்வர் பழனிசாமி மேற்கொண்ட பணிகளைப் பின்பற்றி, உயிரிழப்புகள் இல்லாத வடகிழக்கு பருவமழையை அரசு எதிர் கொள்ள வேண்டும் என்றார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!