மதுரை வாரச்சந்தையில் குவிந்தக் கூட்டம்: கொரோனா விதிகள் என்னவாயிற்று ?

மதுரை வாரச்சந்தையில் குவிந்தக் கூட்டம்: கொரோனா விதிகள் என்னவாயிற்று ?
X

மதுரை வாரச் சந்தையில் கொரோனா விதிமுறைகளை மறந்து கூடிய கூட்டம்

மதுரையில் பைபாஸ் பகுதியில் வாரச்சந்தையில் குவிந்த மக்களால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு மற்றும் ஒமைக்கிரான் தொற்று அதிகரிப்பு காரணமாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்திலும் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி முதல் 10ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு புதிய கொரோனா கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தி உள்ளது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், நாளை முழு ஊரடங்கு என்பதால் வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகளை வாங்குவதற்கு இன்றே பொதுமக்கள் கடைகளை நோக்கி வந்த வண்ணம் இருந்தனர்.

மதுரை ஆரப்பாளையம் பைபாஸ் சாலை பகுதியில் வழக்கமாக செயல்படும் வாரச்சந்தையில் காய்கறி மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை வாங்க பொதுமக்கள் அதிகளவில் திரண்டுள்ளனர்.

தனிமனித இடைவெளியின்றி முகக்கவசம் அணியாமல் பொதுமக்கள் கொரானா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல், பொதுமக்கள் அதிகளவில் காய்கறிகளை வாங்க கூடியுள்ளதால் நோய்த்தொற்று பரவும் அபாயகரமான சூழல் நிலவி வருகிறது.

கடந்த வாரம் வரை ஒருநாள் பாதிப்பு 50-க்கும் குறைவாக இருந்து வந்த நிலையில், இரண்டு நாட்களாக கொரானா பாதிப்பு என்பது அதிகரித்து உள்ளது.

கொரானாவை கட்டுப்படுத்த 12 குழுக்கள் மாநகராட்சியால் ஏற்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் உள்ள நிலையில், வாரச்சந்தையில் பொதுமக்கள் கூட்டத்தை முறையாக கண்காணிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொரானா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து கொரானா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில், பொதுமக்கள் அச்சமின்றி வாரச்சந்தையில் கூட்டமாக கூடியது நோய்த்தொற்று வேகமாக பரவும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil