இலங்கை அகதிகள் முகாமில் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இலங்கை அகதிகள் முகாமில் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X
திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டியில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாமில் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் உள்ள 52 பேருக்கு கொரான கண்டறியப்பட்டு அப்பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக திருமங்கலம் நாகராட்சி துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கொரானா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தமிழகத்தை பொறுத்தவரை தற்பொழுது 35ஆயிரம் நபர்கள் கொரானா தொற்றால் பாதிக்கின்றனர்.

மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் நாள் ஒன்றுக்கு 1300 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனை, தோப்பூர் அரசு நுரையீரல் மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, பள்ளி-கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு கொரானா கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கின்றனர் வருகின்றன.

அந்த வகையில் மதுரை மாவட்ட சுகாதாரத் துறையினர் சார்பில் மருத்துவ குழு வீதி வீதியாக சென்று கொரானா பரிசோதனை செய்து வருகின்றனர். தற்போது திருப்பரங்குன்றம் அருகே உள்ள உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் 51 பேருக்கு கொரானா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், அப்பகுதி முழுவதும் திருமங்கலம் நகராட்சி துறை அதிகாரிகள் அப்பகுதி முழுவதும் தகரம் கொண்டு அடைத்துள்ளனர். தொற்று கண்டறியப்பட்ட நபர்கள் வசிக்கும் வீடுகள் மற்றும் அவர்கள் குடியிருக்கும் பகுதிகள், சாலை முழுவதும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொதுமக்கள் யாரும் அப்பகுதிகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai marketing future