மதுரையில் குடு குடுப்பை அடித்து கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்

மதுரையில் குடு குடுப்பை அடித்து கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்
X

மதுரையில் குடுகுடுப்பை அடித்து கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.

மதுரையில் ரெட்கிராஸ் அமைப்பினர் குடு குடுப்பை அடித்து கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

கொரோனா மற்றும் ஓமிக்ரான் தொற்றை தடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசு இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல் படுத்தி இருக்கும் நிலையில், மதுரையில் பல்வேறு இடங்களில் சோதனை சாவடி அமைத்து காவல்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை கோரிப்பாளையம் அருகில் செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் மற்றும் காவல்துறை இணைந்து சாலையில் வரும் வாகன ஓட்டிகளிடம் கொரோனா மற்றும் ஒமிக்ரான் நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக குடு குடுப்பை அடித்தும், உடல் பரிசோதனை செய்தும், முகக்கவசம் அணியாதவர் களுக்கு முக கவசம் கொடுத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!