திருமங்கலம் அருகே டோல்கேட்டை அகற்றுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
திருமங்கலம் அருகே கப்பலூர் டோல்கேட்டை அகற்றுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கப்பலூரில் அமைந்துள்ள மத்திய அரசால் இயக்கப்பட்டு வரும் சுங்கச்சாவடி , கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து செயல்பட்டு வரும் நிலையில், முன்னதாக , இச்சுங்கச்சாவடி விதிமுறையை மீறி இங்கு அமைக்கப்பட்டுள்ளதாகவும் , அதற்கான உரிய இடமான ராயபாளையம் என்ற இடத்தில் அமைக்கப்படாமல் , கப்பலூரில் அமைத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து ,
திருமங்கலம் நகர்வாசிகள் மற்றும் பொதுமக்கள், தொழிலதிபர்கள், வேன், டாக்ஸி ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் பலமுறை பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில், உள்ளூர் வாகனங்களுக்கு மட்டும் சுங்கச்சாவடி நிர்வாகம் கட்டண விலக்கு அளித்தது .
இதனைத்தொடர்ந்து, அவ்வப்போது உள்ளூர் வாகனங்களுக்கும் , கட்டண விலக்கு செலுத்த கூறி சுங்கச்சாவடி நிர்வாகத்தினர், பலமுறை நிர்பந்தப்படுத்தியதால் , சுங்கச்சாவடி நிர்வாகத்தினருக்கும், திருமங்கலம் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கும் இடையே வாக்குவாதங்கள் நடைபெறுவது தொடர் கதையாகி வந்த நிலையில் ,திடீரென்று சுங்கச்சாவடி நிர்வாகம் திருமங்கலம் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு , நூற்றுக்கணக்கான நடைகள் சுங்கச்சாவடியை கடந்துள்ளதாக கூறி , ரூபாய் 50 ஆயிரம் முதல் இரண்டு லட்சம் வரை வாகன ஓட்டிகளுக்கு திடீரென நோட்டீஸ் அனுப்பியது .இதனால், அதிர்ச்சி அடைந்த திருமங்கலம் உள்ளூர் வாகன ஓட்டிகள் , அமைச்சர் மூர்த்தியை அணுகி பேச்சு வார்த்தை நடத்தினர். அமைச்சர் மூர்த்தி இதற்கு உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படுவதாக பேச்சுவார்த்தையில் முடிவு எடுத்தார்.
ஆனால், சுங்கச்சாவடி நிர்வாகம் மீண்டும் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு கட்டணம் செலுத்த நிர்ப்பந்தப்படுத்தி வருகிறது. இதனை ஒட்டி திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் அபிநயா - விடம் திருமங்கலம் உள்ளூர் வாகன ஓட்டிகள் ,தொழிலதிபர்கள், வியாபாரிகள் இன்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், சுங்கச்சாவடி நிர்வாகத்தினரும் பங்கு பெற்றனர். முடிவில் இப்பிரச்னையை மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்வதென முடிவு செய்யப்பட்டது. இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் ,திருமங்கலம் உள்ளூர் வாகன ஓட்டிகள் மற்றும் ராஜபாளையம், தென்காசி வரை உள்ள வாகன ஓட்டிகள் தங்களுடைய ஆதார் கார்டை சுங்கச்சாவடியிடம் காண்பித்து கட்டணமின்றி இலவசமாக செல்லலாம் என தற்காலிக முடிவு எடுக்கப்பட்டுள்ளது .
இந்த நிலையில் திருமங்கலம் வாகன ஓட்டிகள் மற்றும் ராஜபாளையம் , தென்காசி உள்ளிட்ட வாகன ஓட்டிகள் ஏற்கெனவே அறிவித்தபடி, விதிமுறை மீறி வைத்துள்ள சுங்கச்சாவடியை அகற்றக்கோரி, வருகிற டிசம்பர் எட்டாம் தேதி சுங்கச்சாவடி -யை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதென முடிவு செய்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu