மதுரை அருகே பாலம் கட்டும் பணி: அமைச்சர் தொடக்கம்
மதுரையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்பி.மூர்த்தி , மதுரை அருகே பாலம் கட்டும் பணியை, தொடங்கி வைத்தார்.
மதுரை மாவட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 10 நாட்களில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிறு பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மாங்குளம் அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமம் ,கிருஷ்ணாபுரம் பரம்பை கண்மாயின் உபரிநீர் செல்லும் ஓடையின் குறுக்கே நீர்வளத்துறை சார்பாக ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிறு பாலம் அமைக்கும் பணிகளை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நேற்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார், பொறுப்பேற்று ஈராண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. பொதுமக்கள் நலன் சார்ந்த இந்த ஈராண்டு சாதனை பயணத்தில மக்கள் நலனுக்காக எண்ணற்ற அரசு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, பொதுமக்களின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளான குடிநீர் வசதி சாலை வசதி, தெருவிளக்கு வசதி போன்ற திட்டப்பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அந்த வகையில் , மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், கடந்த 25.04.2023 அன்று மாங்குளம் கிராம பகுதியில் சாலை மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைக்க வருகை தந்தபோது மாங்குளம் அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமம் கிருஷ்ணாபுரம் மக்கள் ,
தங்களது பகுதியில் மழைக்காலத்தில் மழைநீர் தேங்கி சாலையை கடக்க மிகவும் சிரமாப்படுவதாக தெரிவித்தார்கள். மேலும் , கிருஷ்ணாபுரம் பரம்பை கண்மாயின் உபரிநீர் செல்லும் ஓடையின் குறுக்கே சிறு பாலம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்கள்.அதன்படி, அப்பகுதியில் உடனடியாக சிறு பாலம் அமைக்கப்படும் என, உறுதியளித்தேன்.
இதனையடுத்து இன்றைய தினம் கிருஷ்ணாபுரம் பரம்பை கண்மாயின் உபரிநீர் செல்லும் ஓடையின் குறுக்கே சிறு பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. சிறு பாலம் அமைக்கப்படும் என, தெரிவித்த 10 நாட்களில் அதற்கு செயல் வடிவம் கொடுக்கும் விதமாக இப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை, விரைவாகவும் தரமாகவும் மேற்கொண்டு மழைக்காலம் தொடங்கும் முன்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், குடிநீர் வசதி , மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகள் வேண்டி பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி தீர்வு காணவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது, மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ். அனீஷ் சேகர் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மணிமேகலை , உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu