சோழவந்தானில் தண்டவாளத்தில் அமர்ந்து காங்கிரசார் ரயில் மறியல் போராட்டம்
சோழவந்தான் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் அமர்ந்து காங்கிரசார் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.
சோழவந்தானில் காங்கிரஸ் கட்சியினர் தண்டவாளத்தில் அமர்ந்து ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.
இந்திய தேசிய காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை மீது பொய் புகார் கொடுத்த பகுஜன் சமாஜ்கட்சி மாநில பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் மாவட்ட பொறுப்பாளர் மூர்த்தி தலைமையில், மாநில நிர்வாகிகள் ஈஸ்வரன், சங்கரபாண்டி, பவுன்ராஜ், இளவரசன், சித்ரா, நளினி, பஞ்சவர்ணம், சோனி முத்து ஆகியோர் முன்னிலையில் சோழவந்தான் நகரில் இருந்து ஊர்வலமாக பிஜேபி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றை எதிர்த்து கோஷம் போட்டு வந்தனர்.
பின்னர் ரயில் நிலையத்திற்குள் சென்று அங்கு திண்டுக்கல் மதுரை ரயில் மார்க்க தண்டவாளத்தில் அமர்ந்து பிஜேபி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு எதிராக கோஷம் போட்டனர் .
சுமார் அரை மணி நேரம் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. இதைத் தொடர்ந்து, சோழவந்தான் போலீசார் இவர்களை அப்புறப்படுத்தினர். இதைத் தொடர்ந்து, இவர்கள், சோழவந்தான் பஜாரில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பின்னர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, சோழவந்தான் காவல் நிலையம் சென்று இன்ஸ்பெக்டர் ஆனந்த குமாரிடம் பகுஜன் ஜமாத் கட்சி மாநில பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் மற்றும் பிஜேபிகட்சியின் தமிழக பொறுப்பாளர் எச். ராஜா, பிட்டா, சஞ்சய் ஹேய் க்வாட், மார்வா ஆகியோர் மீது தேவையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்துள்ளனர்.
இதில் நிர்வாகிகள் வேல்முருகன், அஷ்டலட்சுமி, மணிவண்ணன், செந்தில், அபுதாகிர், நாராயணன், முருகன், சுமதி, ஜான்சிராணி, தேனி மாவட்ட நிர்வாகிகள் வேல்முருகன், மாரியப்பன், மின்னல் மழை உள்பட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu