மதுரை அருகே அலங்காநல்லூரில் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

மதுரை அருகே அலங்காநல்லூரில் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
X

அலங்காநல்லூர் ஸ்டேட் பேங்க் முன்பாக மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

நூறுநாள் வேலைத்திட்டத்தை முடக்க முயற்சி செய்யும் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

அலங்காநல்லூர் ஸ்டேட் பேங்க் முன்பாக மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஸ்டேட் பாங்க் மற்றும் கனரா வங்கி முன்பாக, 100 நாள் வேலை திட்டத்தை முடக்கும் மத்திய அரசைக் கண்டித்து, அலங்காநல்லூர் வட்டார காங்கிரஸ் சார்பில் வட்டார தலைவர் சுப்பாராயலு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயமணி, வடக்கு வட்டாரத்தலைவர் காந்தி, அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சோனைமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், 100 நாள் வேலை திட்டத்தை படிப்படியாக மத்திய அரசு முடக்கி வருவதாகவும், வேலை ஆட்களுக்கு ஊதியம் வழங்காததை கண்டித்தும், நிதி ஒதுக்கீடு செய்யாமல் திட்டத்தை முடக்கும் மக்கள் விரோத பாஜக அரசை கண்டித்து அலங்காநல்லூர் வாடிப்பட்டி செல்லும் சாலையில் உள்ள ஸ்டேட் பாங்க் மற்றும் கனரா வங்கி முன்பாக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், நகர் தலைவர்கள் சசிகுமார், வைரமணி, மனித உரிமை மாவட்ட த்தலைவர் முத்து, தகவல் தொடர்பு துறை அமைப்பாளர் கௌதம் பாலா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லாவண்யா, அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அமுதவாணி, ஒன்றிய துணைத் தலைவர் மலைராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story