சோழவந்தான் காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனுத் தாக்கல்

சோழவந்தான் காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனுத் தாக்கல்
X

சோழவந்தான் பேரூராட்சி 7.வது வார்டு காங்கிரஸ் வேட்பாளராக மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி செல்லப்பா சரவணன் வேட்புமனு தாக்கல் செய்தார்

சோழவந்தான் காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனுத் தாக்கல்

தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் மாநகராட்சி நகராட்சிகள் பேரூராட்சிகள் உள்ளிட்ட வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சிக்குட்பட்ட 7-வது வார்டில், காங்கிரஸ் சார்பாக மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி செல்லப்பா சரவணன், தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். உடன், நகர காங்கிரஸ் தலைவர் முத்துப்பாண்டி, தொகுதி ஊடகப்பிரிவுத் தலைவர் வையாபுரி மற்றும் பழனிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!