மதுரை அருகே காங்கிரஸார் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

மதுரை அருகே காங்கிரஸார் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
X

 மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி செயலாளர் அம்மாபட்டி பாண்டி தலைமையில், திரண்டு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்ததை வரவேற்று காங்கிரஸார் தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்

கர்நாடக தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் பெரும்பான்மையான இடங்களி் வென்று காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ள வரவேற்று காங்கிரஸ் கட்சியினர் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

34 ஆண்டுகளுக்குப் பிறகுஇ காங்கிரஸ் அதிகமான வாக்குகள் மற்றும் இடங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.2023 கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கெடுப்பு மே 10ஆம் தேதி நடத்தப்பட்டது.அதை தொடர்ந்துஇ இன்று(மே 13) அந்த வாக்குகள் எண்ணப்பட்டன.224 இடங்களை கொண்ட கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 113 இடங்களை கைப்பற்றினால் தனி பெரும்பான்மை கிடைக்கும் என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி 136 இடங்களில் தனித்து நின்று வெற்றி பெற்றுள்ளது

மதுரை மாவட்டம், திருநகரில் உள்ள விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர்மாணிக்கம் தாகூர் அலுவலகம் முன்பு, ஏராளமான காங்கிரசார், மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி செயலாளர் அம்மாபட்டி பாண்டி தலைமையில், திரண்டு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இதில், மேற்கு வட்டாரத் தலைவர் சுப்பிரமணியன், சரவணபகவான், வார்டு தலைவர் முனியசாமி, திருமங்கலம் நகர தலைவர் சௌந்தரபாண்டி, நகராட்சி கவுன்சிலர் அமுதா சரவணன், உச்சப்பட்டி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உலகநாதன் , காங்கிரஸ் கட்சியின் மூத்த பேச்சாளர் பொன் மனோகரன் உள்பட பல்வேறு பகுதியில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai in future agriculture